பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335 "1865 : மங்கள விலாசம் விஜய சதானந்தஜி வகைறாக்கள் 10 பேர் கலியாணம் 1865 ஆகஸ்டு 28 முதல் 31 வரையிலும் ' . - என்ற குறிப்பால் அரண்மனையில் சந்திரமெள வீசுவரர் திருக்கோயிலில் மங்கள விலாச மாதரார் பெற்றெடுத்த பிள்ளைகட்குத் திருமணங்கள் நிகழ்த்தப் பெற்றன என்று அறியலாம்." மங்கள விலாஸ்க் குழந்தைகளைச் சீரும் சிறப்புமாகவே சிவாஜி வளர்க்கச் செய்தார். இது, "1850: மங்களவிலாசத்தில் புருஷக் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் ஜவுளி நகைகள் முதலியன ' என்ற குறிப்பால்" உறுதி எய்தும். o மங்கள விலாஸம் குழந்தைகள் இறந்துபடின் பெரிய அலுவலர் மேற்பார்வையில் இறுதிக்கடன்களைச் செய்விப்பது பழக்கம். " மங்களவிலாசத்தில் காசி பாயியின் ஆண் குழந்தை தெய்வகதி யடைந்தது ; தகனம் செய்தார்கள் : சர்க்கீல் பண்டிதர் ராஜபூரீ நீல கண்டராவ் ஆனந்தராவ் ஜாதவ் போய் வந்தார். டிை விஷயமாக 11 பிராமணப் பையன் களுக்குச் சாப்பாடு போடப்பட்டது." என்ற குறிப்பு மங்கள விலாஸ்க் குழந்தைகளுக்கு எல்லாச் சடங்குகளும் கண்ணும் கருத்துமாகச் செய்யப்பட்டன என்பதைத் தெரிவிக்கும். மங்கள விலாஸ்த்தைச் சேர்ந்தவர்களுக்குச் சமையல் தனியாக நடை பெற்றது. அச்சமையல் செய்யும் வீடு கீழவீதியில் இருந்தது." மங்கள விலாஸ்த்தைச் சேர்ந்த நகைகள் பங்கிட்டுக் கொடுக்கும் பொருட்டுச் சர்க்கேல் வீராசாமிப்பிள்ளை ஓர் ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது." மங்கள விலாஸ்த்தைச் சேர்ந்தவர்களின் செலவுக்கெனச் சில ஊர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை சுரோத்திரியம் வடமட்டம் பூங்குடி ஆகிய ஊர்களாம்." சிவாஜி இறந்துபோனபிறகு மங்கள விலாஸ்த்தைச் சேர்ந்த மாதரார் ஒழுக்கத்தில் சிலர் குறை கண்டிருக்கிறார்கள். குறைகள் ஏற்பட்டிருத்தல் கூடும். மங்கள விலாஸம் லகஷ்மிஅம்மாள் ஐயங்கார் பிராமணப் பெண் ஆவர். 31. ச. ம. மோ. த. 7-27 32. “All the marriages of Mangala Vilas Children used to take place in that temple within the palace” - Deposition of Yogambal, P. 26 33. 1–5 34. ச. ம. மோ. த. 9-27 35. ச. ம, மோ. த. 8-88 36. 6–286, 287 37. 7-878, 879; 6–542.