பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 காசியில் சிவபிரதிஷ்டை செய்த விபரம் செள. பத்மாம்பாயி சாஹேப் பெயரால் ரூ. 1875; பூரீமங்கள விலாஸம் காசி பாயி அக்கா பெயரால் ரூ. 1875; ஆக ரூ. 3750” என்ற குறிப்பு: அக்காமார் அறம் செய்யும் சிந்தனையுடையராகவும் தெய்வ பக்தியுடையராகவும் இருந்தமையோடு காசியில் சிவலிங்கத்தை எழுந்தருள் வித்தல் ஆகிய சிவபுண்ணியச் செயல்கள் செய்தமைக்கும் சான்றாக அமையும். அக்கா கூட்டங்களின் நகைகள் என்ற தலைப்பில், 1855 : லசஷ்மு அக்கா, வீரம்மா அக்கா, ரமா பாயி அக்கா, கிருஷ்ணா பாயி அக்கா, காமு பாயி அக்கா, ஸ்வர்ணவல்லி பாயி அக்கா - இவர்களுடைய நகைகளின் ஜாபிதா' என்ற குறிப்பு" அக்காமார்களும் நகைகளை அணிந்து செழிப்புடனிருந்தனர் ஆதல் பெறப்படும். லகஷ்மு அக்கா முதலியன லகஷ்மு பாயி ஆகிய மங்கள வில்ால மாதராரின் பணிப்பெண்டாகிய அக்கா என்று பொருள்படும். அக்கா கூட்டமும் அரண்மனையில் சிறப்பிடம் பெற்றுவாழ்ந்தனர் என்பதும் இதல்ை உறுதியெய்தும். 48. ச. ம. மோ. க. 8-40 49. ச. ம. மோ. த. 7.10