பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பழக்க வழக்கங்கள் அரச குடும்பத்துக்கு மரியாதை கி. பி. 1829இல் இரண்டாம் சரபோஜி அரச குடும்பத்துக்கும் மற்றவர் கட்கும் மரியாதை செய்யவேண்டிய முறைபற்றி ஆணை பிறப்பித்திருக்கிறார்.' "பூரீமந்த் ராஜபூரீ மகாராஜா சத்திரபதி சாயேப், சிாஞ்சீவி இளைய திவான்சாகேப், மாதுபூரீ பாயிசாகேப், சொ. சிரஞ்சீவி மாட்டுப் பெண், மாதுபூரீ பாயிசாகேப் - இவர்கள் ராஜகுடும்பம் என்பது" -- என்றமையால் அரசர், இளவரசர், அவர்தம் பட்டத்தரசிகள் மட்டுமே ராஜ குடும்பத்தவர் என்று கருதப்பட்டமை தெளிவாகிறது. அவர்கள் வெளியே புறப்பட்டால் ' சவாரி ' தொடங்குவது முதற் கொண்டு மீண்டும் அரண்மனைக்கு வருகிற வரையில் வாத்தியக்காரர்களும் மற்றவர்களும் நேரம் பார்க்காமல் இரவு பகலும் பணிசெய்தல் வேண்டும். அரச குடும்பம் தவிர்த்து மற்றையோர் " ஜோஹார் யந்திரம்" என்று குறிக்கப்பெறுவர். == வாத்தியக்காரர்கள் காலையில் " கர்காரி கோஷத்" துக்குப் பிறகு 2 நாழிகை வரையிலும், மாலையில் 10 நாழிகைக்குப் பிறகு (அதாவது சுமார் 4 மணிக்குப் பிறகு) " சந்தி காலம்" அதாவது பொழுது சாய்கிற வரையிலும் பணி செய்தல் வேண்டும். மரியாதைகள் மூன்றுவகை: 1. ச. ம. மோ, த, 6-24 முதல் 28 முடிய