பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l 341 சம்பளப் பிடித்தமும் செய்தல் வேண்டும் ; ஒருநாள் முதல் 8 நாள் வரை சிறையிலும் போடலாம். இழிந்தவர் ஆயின் மூன்று அடி முதல் 6 அடி வரை கொடுக்கலாம். --- ஆணைகள்-எல்லாவற்றையும் எழுத்து மூலம் கொடுக்கவேண்டும். அலுவலர்களை மாதம் ஒரு முறை மாற்றவேண்டும். விஜயதசமிக்குத் துப்பாக்கிச் சுடும் மரியாதைக்குப் பத்து நாட்களுக்கு முன்னதாகவே ஆயிற்சி கொடுத்தல் வேண்டும். ஃபவுஜ்தார் அலுவலர்களுக்கு 15 நாள் விடுப்புக் கொடுக்கலாம்; விடுப்பு முடிந்து வந்துவிட்டார்களா என்றும் கவனிக்க வேண்டும் உடம்பு சரியில்லை என்றால் மாற்றாள் நியமித்தல் வேண்டும். கொடிக்கு மரியாதை கவாத்துக்குப் போய் வரும் துப்பாக்கி வீரர்கள் கொடியுடன் இருந்தால், கொடிக்கு ஹ- ஜூர் (அரசர்)க்குச் செய்யும் மரியாதை செய்தல் வேண்டும். இவ்வீரர்கள், எதிரில் வருபவர் பெரிய அலுவலர்கள் ஆயினும் அவர்கட்கு மரியாதை செய்யத்தேவையில்லை. அதிகாரிகளின் வரிசை ஆயுதங்கள் வைக்கும் இடத்திற்கு " மந்திர்" என்று பெயர். அவ் ஆயுதங்களைக் காவல் புரியும் அதிகாரிக்கு " மந்திர் பிரதிக்வான்" என்று பெயர். ஆயுதங்கள் முதலியவற்றைக் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்வதும் பழுதுற்றவற்றைப் பழுது பார்ப்பதும் பிரேரக பிரதிக் வான் என்பவரது கடமையாகும். பிரேரக பிரதிக்வானின் மேலதிகாரி பாக்வான். அலுவலர்கள் நீராடுதல் உணவு ஆகியவற்றுக்கு வீட்டுக்குப் போகலாம்; மற்ற நேரங்களில் அரண்மனையில் இருக்கவேண்டும். _ _

  • ஹ-த்தேகாரர்கள் (?) காலையிலும் மாலையிலும் எல்லாப் பட்டாளங்

களையும் சுற்றிப்பார்க்க வேண்டும். சுற்றிப்பார்க்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அரண்மனையில் இருக்கும் பெரிய பட்டாளத்தில் இருக்க வேண்டும். 5. கவாத்து - போர் வீரர்கள் செய்யும் உடற்பயிற்சி