பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 ஹாத்தேகாரர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழக்குகள் ஏற்பட்டால் ஃபவுஜ்தாரும் ஹாத்தேகாரர்களும் சேர்ந்து வழக்கை முடித்துக் கொள்ள லாம். வாதி புனர்நியாயம் அதாவது மேல் முறையீடு செய்தால் 'மத்யஸ்தர்' இடம் முறையிடலாம். மீண்டும் மேல்முறையீடு செய்ய விரும்பின் ஃபவுஜ்தார் " சப்னிஸ்" என்ற அலுவலரைக்கொண்டு விசாரிக்கச் செய்யலாம். இதற்கு மேல் விசாரணை இல்லை. (ஆயுதங்கள் வைக்கும் இடமாகிய) மந்திரத்தில் இருக்கும் அலுவலர் பாதிப்பேர் இரவில் வீட்டுக்குப் போகலாம். எஞ்சிய பாதிப்பேர் மந்திரத் திலேயே படுத்துக்கொள்ளவேண்டும். இரவில் தங்கியவர்கள் காலையில் போய்விடலாம். வேலை பார்ப்பவர்கட்கு எண் கொடுக்கவேண்டும். பதவி உயர்வுக்கு எண் " காரணம் ஆகும். முதல் எண் உடையவர் வலிமை குறைந்தும், நோயுற்றும், அறிவிலராயும் 'போக்கிரி ' ஆகவும் இருந்தால், அவர்க்கு அடுத்த இரண்டாம் எண் உள்ள ஆளுக்குப் பதவியுயர்வு கொடுக்கப்பெறும். சரியாக நடந்துகொள்பவர் எந்த எண்ணில் இருந்தாலும் முதல் எண் ஆகிப் பெரிய பதவிக்கு உயர்த்தப்படுவர். பட்டாளத்துப் பதவிகள் சிப்பாய்-தர்சி - பிரதிக்வான் - மந்திர பிரதிக்வான்-பிரோக பிரதிக்வான் - பாக்வான் - பிரதி சமுத்வான் - சமுத்வான் - ஸ்பரசமுத்வான் - எல்லாருக்கும் மேல் முக்ய சமுத்வான். ஆறு ஆட்களுக்குத் தர்சி- 1, 12 பேருக்குத் தர்சி-2: பிரதிக்வான்.1 12-24 பேருக்குத் தர்சி - 4; பிரதிக்வான் 1; பாக்வான் 1 -- 48 பேருக்குத் தர்சி-8; பிரதிக்வான் பாக்வான் அல்லது சமுத்வான்-1. மாற்றுங்கால் மேல் பதவியில் உள்ளோரை மாற்ற வேண்டியதில்லை. தர்சி முதலானவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டால் பதவிவுயர்வு கொடுத்துச் சிப்பாய்களையே நியமிக்க வேண்டியது. இங்ங்னம் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்ததால் அவ்வண்ணமே அரண்மனைக் காவல் அலுவல் பார்க்கும் இவர்கள் தம் வேலையை நன்கு செய்துவந்தனர். ஆதல் கூடும். வழிநடைச் சிட்டு அரண்மனை அலுவலில் இருப்பவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை, திருப்பதி, ஹைதராபாத், பண்டரிபுரம், பூனா முதலிய ஊர்களுக்குப்