பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345 முகாம் கயை : 4-5-1821: தஞ்சாவூர் காளா அப்பாவின் பிள்ளை கிருஷ்ணன் சவாரியுடன் கூட இருந்து கொண்டு ஹ-ஜுருக்கும் பாயிசாபுக்கும் பிள்ளையார் இலிங்கம் செய்து கொடுத்து ஊழியம் செய்வதால் அவன் தகப்பனாருக்குத் தஞ்சை அன்னசத்திரத்தில் மற்றச் சாமான்களுடன் உலுப்பை இரண்டு கொடுப்பது ” - என்று கயையினின்று விடுத்த ஆணையால்'க நாடோறும் சரபோஜிக்குச் சிவலிங்க பூசைக்குச் சிவலிங்கம் செய்து கொடுத்தமை உறுதி எய்தும். சுவீகாரம் எடுத்துக் கொள்ள தமக்குக் குழந்தைகள் இல்லை எனில் " சுவீகாரம்' எடுத்துக் கொள்வது தொன்றுதொட்டுள்ள வழக்கமாகும். சங்கரமூர்த்தி என்பவர்; இவர் உடல்நிலை குன்றியவர் ஆனார்: இவர்க்குக் குழந்தைகள் இல்லை; மனைவியின் உடன்பிறந்தவர் நாராயண்ன்என்பவர் இவரது பராமரிப்பில் இருந்தார். ஆகவே இந்நாராயணனைச் " சுவீகாரம்' எடுத்துக்கொள்ளவும், தன் அலுவலை அவருக்குக் கொடுக்கவும். மன்னரின் இசைவை 1843இல் வேண்டினார்." -- கி. பி. 1854, ஒரு முகமதியர்; முஜபர் பீர் குலாம் அலி தெளலத் லஷ்கர் என்ற பெயருடையவர்; அரண்மனை வேலையில் இருந்தவர்; இவருக்கு ஒரே மகன் இருபது ஆண்டுகட்கு முன் இறந்தார்; தன் மகளின் இரண்டாவது மகனைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளவும், தனக்குப் பிறகு சுவீகார மகனுக்குத் தன் வேலையைக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டினார்.' சேக் இஸ்மாயில் என்றொருவர் தன் மைத்துணியின் மகன் 9 வயது உடைய இப்ராஹிம் என்பவரைத் "தத்து " எடுத்துக் கொள்ள அரசு இசைவு வேண்டி உள்ளார்.' = - - இவற்றால் முகமதியர்களாயினும் அரசு இசைவுபெற்றே சுவீகாரம் எடுத்துக் கொண்டனர். ஆதல் பெறப்படும். தந்தைக்குப்பின் மகனுக்கு அலுவல் மேலே கண்ட சங்கரமூர்த்தியும், முஜாபர் பீர் குலாம் அலியும் தம் சுவீகாரபுத்திரர்கட்குத் தம் வேலையைக் கொடுக்கவேண்டும் என்று வேண்டியது தந்தைக்குப்பின் மகன் தந்தையின் அலுவலைப் பெறும் பழக்கம் இருந் தமையாலே ஆகும். - =...= = гв H. 16. 5.99 1881 சரபோஜி மகாராஜா " அதிகால எழுக்க ஸ்நானம் சக்தி பிரம்மயக்ஞம் சிவபூசை முதலியன செய்து ' என்ற ச.ம.மோ. க. 16-17 காண்க 17. ச. ம. மோ. த. 8.8 18. ச. ம. மோ. த. 1-89 19, 10-86 44