பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 "ஜிராத்கானா கார்கூன் சக்ரோ அப்பாஜி இறந்தார். அந்த உத்தி யோகம் அவருடைய சுவீகாரபுத்திரனுக்குக் கொடுப்பது ” என்ற ஆணையும் இதனை வலியுறுத்தும்" ■ 'சிவகங்கை என்பாளின் கணவன் இறந்தான். அவன் சம்பளம் அரண்மனையார் " கிராம வழக்கப்படி " அவன் மகனுக்குத் தந்தனர். பிறகு அவன் பேரால் சம்பளம் தரப்பட்டது; ஆனால் ரூ. 3 ரூ. 2 ஆக்கப்பட்டது.

அவனைச் சேவகத்துக்கு வரச்சொன்னார்கள்" - இதனால் தந்தைக்குப்பின் மகனுக்குத் தந்தையின் வேலை செய்து தரப்படும் என்பது உறுதியாகத் தெரியவருகிறது. தந்தை இறக்கும்பொழுது மகன் சிறுவனாக இருந்தால் பெரியவன் ஆகும்வரை பதில் ஆள் வைப்பதுண்டு. முக்தாம்பாள் சத்திரம் சுப்பராயர் என்பவன் இறந்துவிட்டான் ; அவன்மகன் சிறுவன் ; ஆகவே ' பெரியவ னாகும் வரை பதில் ஆள் வைத்து வேலைகள் செய்து உலுப்பை வாங்கிக் கொள்ளுகிறது" என்றுள்ள குறிப்பால்" இதனை அறியலாம். கணவன்பேரால் இருந்த ஸ்தானிகம் ' அவன் இறந்தபிறகு மனைவி பேருக்கு மாற்றப்பெறுதலும் உண்டு என்று ஒரு ஆவணத்தால் விளக்க முறுகிறது." மஞ்சள் நீர்ச் சாசனமுறி ஒரு பையனைச் சுவீகாரம் எடுத்துக்கொள்ளும்போது அக்குழந்தையை மஞ்சள் நீர் குடிக்கச் செய்வர். இந்தச் சடங்குக்கு மஞ்சள் நீர் குடிப்பித்தல்? என்று சொல்வர். இங்ங்னம் மஞ்சள் நீர் குடிப்பித்தபின்னர்ச்_ததும் எடுத்துக்கொண்டு எழுதிக்கொடுக்கும் ஆவணத்துக்கு மஞ்சள் நீர்ச் சீட்டு ' அல்லது மஞ்சள் நீர்ச்சாசனமுறி ' என்பது பெயர். இத்தகையதொரு ஆவணம் கிடைத்துள்ளது." பதில் ஆள் வைத்தல் பதில் ஆள் வைக்கவேண்டிய இன்றியமையாமை சில வேலைகட்கு உண்டு. பதில் ஆளுக்குச் சம்பளம் எவ்வளவு என்பதுபற்றி அறிய வாய்ப் புள்ளது. பூசை செய்பவர் கோபால் சாத்திரி. இவர் விடுப்பு எடுத்துக் 19 ஆ. ச. ம.மோ. த. 2-85 20. 6-548, 544, 545 21. ச. ம. மோ, த. 8-27 22, 6-106, 107. 23. Tamil Lexicon M. U. :- பராசரபட்டரைப் பேருமாள் மஞ்சள் நீர் குடிப்பித்துப் புத்திர ஸ்வீகாரம் பண்ணியருளி" ( குரு பரம்பரை - 854 ) 24, 8-41. 48