பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&O அனாதைப் பிணங்கள் கி. பி. 1772 துளஜா பெரும் போர்களில் ஈடுபட்ட காலம்; நவாபுடன் போர் நடைபெற்ற சமயம் பலர் அனாதைகளாகத் தஞ்சையில் இருந்தனர் போலும். அத்தகைய அனாதைகளிற் சிலர் இறந்து போயினர். அப்பிணங் களை அப்புறப்படுத்துவது அரசின் கடமையாயிற்று. . - . 1772 : அனாதி சவங்கள் : கொட்டியக்காரன் வீட்டினிடம் பெண் 1; கீழவாசலில் பெண் 1 : துக்கோஜி கோனார் வீட்டினிடம் புருஷன் 1; பாதரி வீட்டிடம் புருஷன் 1; எல்லம்மன் கோவிலிடம் பெண் 1; நாயக்ஜி வீட்டிடம் புருஷன் 1; வல்லம் காசலில் பெண் 1; கொடிமரத்து. மூலையிடம் புருஷன் 1; இவை ஒவ்வொன்றுக்கும் பணம் அப்புறப்படுத்துகிறது! . .". என்ற ஆணையால்" பலர் ஒரே நாளில் அனாதைகளாக இறந்தனர் என்பது உறுதி எய்தும் - ஆதகம் உறவினர்களின் பிறப்பு இறப்புக்களில் காக்கும் ( ஆசெனசம்) திட்டு: சூதகம் எனப்படும். 3.நாட்கள் முதல் பத்து நாட்கள் வரை இது காக்கப்படும். அரண்மனையில் சூதகம் (ஆசெளசம்) நன்கு காக்கப்பட்டது எனத் தெரிகிறது. ஆசெளசம் உடையவரைத் தீண்டுதலும் கூடாது ; அவர் கைப்பொருளையும் பெறுதல் கூடாது என்பது அந்நாளைய பழக்கம். ** - - == 1832 : கோட்டைவாசல் கோனார் பெண்சாதி இறந்தாள்; ஆகையால் அவனுக்குச் சூதகம் போகிறவரையில் ஹாஜாருக்கு வேறு கோனார் சங்கிராம பண்டாரத்திலிருந்து அனுப்புகிறது" o என்பது இதற்கு எழுத்துச் சான்று." வயது குறித்தல் விண்ணப்பங்களிலோ வேறு குறிப்புக்களிலோ கையெழுத்து இடுபவர்கள் தத்தம் வயது குறிப்பது இன்றியமையாத வழக்கமாகும். இது பின்வரும் குறிப்பால்' அறியவருகிறது: அர்ஜி ரோகாக்களில் 5 அர்ஜிகளுக்கு வயது குறிக்காமல் எழுதியிருக் கிறார்கள். இது வழக்கத்திற்கு விரோதமானது. வயது குறித்துத்தான் அனுப்பவேண்டும். III. - 38. ச.ம. மோ. க. 10-24 39. Tamil Lexicon, M. U. 40. e. o. Ger. a. 6-50 41. ச. ம.மோ. க. 1-8,