பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 'கலியாணமகால் பாயிமார்களின் உபதேசம் பெறுபவர் கண்டகி பாயி... = * * * * = திரிவேணி பாயி, இந்த 14 பேர்களுக்கு ஆளுக்கு ரூ. 30 வீதம் ரூ. 420 கொடுக்கப்பட்டது" என்ற எழுத்துச்சான்றுகள் அரசமாதேவிகள் மட்டுமன்றிக் கல்யாண மகால் பாயிமார்களும் உபதேசம் பெறுதலையும், அதனோடு சிலர் சிவபூசை யேற்றுப் பூசை புரிதலையும் தெரிவிக்கும். இவர்களுக்குத் தாரக மந்திரோப தேசம் செய்யப்பெறும் என்றும், சமர்த்த ராமசாமி மடாதிபதியாகிய அரசகுரு இவ்வுபதேசம் செய்வர் என்றும் தெரியவருகிறது." எண்ணெய் முதலியன வழங்குதல் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகளுக்கு எண்ணெய் மஞ்சள் முதலியன எல்லாச் சாதியினருக்கும் வழங்கப்பெறும். சனிக்கிழமை யன்று அந்தணர் களுக்கு மட்டும் வழங்கப்பெறும். உலுப்பைகளும் வழங்குவதுண்டு." யாத்திரை போக உதவி இராமேசுவர யாத்திரை செய்ய உதவுவது பெரும்பான்மை. பண்டரி புரம் முதலிய வடபுலத்துத் தலங்களுக்குச் செல்லவேண்டும் எனின். சாமான் களைக் கொண்டு செல்ல " மட்டக்குதிரை ' தருவது பழக்கம். இதனை, 1842 : அப்புராவ்: பண்டரிபுரம் யாத்திரை போகக் குதிரையும் மட்ட்க் குதிரையும் இனாம் கொடுப்பது வழக்கம். அதுபோல எனக்கு ஒரு மட்டக் குதிரை வேண்டும்; யாத்ராபலம் தங்கட்கே " என்று அப்புராவ் என்பார் எழுதிய கடிதத்தினின்று அறிந்துகொள்ளலாம். நற்சகுனம் சகுனம் பார்ப்பது இந்நாட்டு மக்கள் பெரும்பாலோர்க்குரிய பழக்கம் என்னலாம். இதற்கு மராட்டிய மன்னர் விதி விலக்கு அல்லர். 1827 : திவான் சாகேப் வெளியேயிருந்து அரண்மனையில் வரும் பொழுது எதிரில் பால்கொண்டு வந்தவனுக்கு ஒரு பணம் ” என்பது: 49. ச. ம. மோ. த. 8-8 50. ” As Rajaguru the chief thing we do is upadesam. We do upadesam even to the wives of the Rajas..... The upadesam is of Tharaka Mantram. This upadesam can be made to both males and females. Upadesam can be given to the wife without giving to her husband” —Pages 1 & 5 – Deposition of Sethu Ramaswmi, 7th witness for defendents 1 and 2, O. S. 26 of 1912 51. ச. ம.மோ. த. 5-40 ஏ 52, 4–485, 486 45