பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355 அபிசீனிய சாதி ஆட்கள் அரண்மனை யில் பணிகட்காகப் பெண்டிரை விலைக்கு வாங்குதல் பெரும்பான்மை. சிறுபான்மை வேற்று நாட்டு ஆட்களையும் விலைக்கு வாங்கியதாகத் தெரிகிறது. "1831 : சர்க்காருக்கு அபிசீனிய ஆட்கள் வாங்கி வருவதற்கு வைத்ய பாபுவின் பையன் மகமத்சாப் என்பவரை மலைவாரப் பிராந்தியத்திற்கு அனுப்பியிருக்கிறது. அவர் அந்தச் சாதி இரு பைன்களை ரு, 250க்கு விலைக்கு வாங்கி இருக்கிறார் என்று ஐயாக்கண்ணுப்பிள்ளைக்குக் கடிதம் எழுதியுள்ளார்......." என்ற குறிப்பு" இச்செய்தியை அறிவிக்கிறது. ஆங்கில மன்னர் இறந்தமை 1830 : சீமை தேசத்தின் ஆங்கிலேய மன்னர் ஜூன் மாசத்தில் பரலோகம் அடைந்ததால் நவம்பர் மாசம் 3ஆம் தேதிமுதல் துயரத்தோடிருக்க ஆரம்பிக்கவேண்டுமென்று கவர்னர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார் H என்றொரு குறிப்புள்ளது."சு கி. பி. 1830இல் இறந்த ஆங்கில மன்னர் நான்காம் ஜார்ஜ் ஆவர்.கே அவர் இறந்தபொழுது தஞ்சையிலும் துக்கம் கொண்டாடினர் என்று அறியப்பெறும். இங்கிலாந்து அரசிக்கு மகன் பிறந்தமை கி. பி. 1841 இல் 'ஹர் மெஜஸ்டி விக்டோரியாக குவீன் " அவர்களுக்கு மகன் பிறந்தார். அப்பொழுது மகாராஜாவின் சபை கூடியது. அச்சபைக்கு மாப்பிள்ளை சகாராம், நாராயணராவ் ஹம்பிராவ், சர்க்கேல் பாவாஜி ராமாஜி பண்டித், நியாயாதீச ராஜேழநீ ஹீரோஜி காளேராவ், சேனாதிபதி கிருஷ்ணாஜி கேசவ் தீகூகித் பண்டித், சேனாதுரந்தரர் நீலகண்டராவ் ஆனந்தராவ் ஜாதவ் ஆகியோர் காலை 8 நாழிகைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று ஆணை" பிறப்பிக்கப்பட்டது. 58. ச. ம மோ. க. 17-4 58.அ. 2-94 58s. List of Governors of Madras- king of England, History of Tami - Nadu, N. Subramanian 59. விக்டோரியா 1887 முதல் 1876 வரை இங்கிலாந்தில் இராணியாகவும் 1876 முதல் 1901 வரை பிரிட்டிஷ் பேரரசின் பேரரசியாகவும் இருந்தவர். 9-11-1811இல் இவர்க்கு இரண்டாவது குழந்தையாக, முதல் மகனாகப் பிறந்தவர் எட்வர்ட். 60. ” The audience consists of relations, Palace officials and rich gentry " - P. 323, Deposition of Sivaji Raja Saheb.