பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355 ரிஸிடெண்ட் அவர்கள் கோட்டைக்குள் வரும்பொழுது 21 குண்டுகள் போடவேண்டும். சபையில் ஹாஜார் நற்செய்தியுள்ள காகிதம் வாங்கும்போது 21 குண்டுகள் போடவேண்டும் " என்று ஏற்பாடு செய்ததாக ஓராவணக்குறிப்புக்" கூறுவதால், பிரிட்டிஷ் அரசாங்க நற்செய்திகள் கேட்கும்பொழுது சபை கூடி மரியாதை செய்கிற பழக்கம் தெரியவரும். இதனால் சிறப்பு அவை கூடும்பொழுது 21 குண்டுகள் போடப்படும் என்றும், குறிப்பிட்ட மேன்மக்கள் மட்டும் அரசவைக்கு அழைக்கப் பெறுவர் என்றும் தெரிகிறது. விவசாயக்கடன் - நிலங்களைப் பயிர் செய்யும் ஏழைக் குடியானவனுக்குப் பயிர்ச் செலவுக்காகக் கடன் கொடுப்பதாகிய வழக்கம் உண்டு. கடன் பெற்றவர் மகசூலில் கடனைத் திருப்பித்தருவர். இங்ங்ணம் வேளாண்மைக்குக்கடன் கொடுத்துத் திருப்பிப் பெற்றதாக ஒரு குறிப்புள்ளது:" ' கணக்கு, கெளன்ட் கரெண்டு பிரகாரம் 1803 முதல் 1804 ஏப்ரல் வரையில் அரசாங்கக்கடன் விவசாயிகளுக்குக் கொடுத்தவகையில் வசூல் விவரம்" என்றதால் கம்பெனியார் வரிவசூல் தமக்குரிய கடமையாக ஏற்றுக் கொண்ட பொழுது வருவாய் பெருக்குதற்பொருட்டு விவசாயக் கடன்கள் கொடுத்துத வினர் என்று தெரிகிறது. நன்றாக வேலை செய்பவரை ஊக்குவித்தல் சரபேந்திரராஜ பட்டணத்தில் " கார்கூன் " அலுவலில் நாகராஜ அப்பா என்றொருவர் இருந்தார். அவர் " தாமதமில்லாமல் அப்போதைக்கப்போது " கணக்குகளை அனுப்பிக்கொண்டிருந்தார். ஆகையால் "அவர்க்குச் சம்பளம் தாமதமில்லாமல் கொடுப்பது" என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது." எனவே நன்கு வேலை செய்தவர்கட்குத் தாமதமின்றி ஊதியம் அளிக்கப்பெற்றது என்றும், செய்யாதவர்கட்கு ஊதியம் கொடுத்தல் தாமதப்பட்டது என்றும் அறியப்பெறும். - அரசர்கட்குப் பொழுதுபோக்கு புலிவேட்டைக்குச் செல்லுதல்' பறவைகளை வேட்டையாடுதல்,க மான்களை வேட்டையாடிப் பிடித்தல்" முதலியன அரசர்க்குரிய பொழுது போக்குகளாகும். வேட்டைக்குப் போகும்பொழுது ஒரு தடவை 38 நாய்கள் உடன் சென்றன என்று தெரிகிறது." 61 * ćF, ED. மோ. தி, 8–34 62. ♔ | மி, மோ. தி: 28-70 63. ச. ம. மோ, த. 8-18 64. 1-88; 4-218; ச. ம. மோ.த.19-23; 28-18 65. 1-88 66, 1-144 -- 67. 4-101