பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 குண்டுபோடுதல் மரியாதை செய்தற்பொருட்டும், நவராத்திரி போன்ற பண்டிகை நாட் களிலும் அரண்மனையில் குண்டு போடுதல் ஆகிய பழக்கம் இருந்தது. அரசனது பிறந்தநாளில் அரசரது வயது எவ்வளவோ அதைக்குறிக்கும் வகையில் அத்தனைக் குண்டுகள் போடப்படும் என்று ஓர் ஆவணம்' குறிப்பிடுகிறது. நவராத்திரி காலத்தில் நாடோறும் 12,பேர்களைக் கொண்டு ரிக் யசுர் சாமவேத பாராயணம் நடக்கும்; 12பேர் ராமாயண பாராயணம் செய்வர்; நால்வர் சப்த சதி; திரிலதி லலிதா சகஸ்ர நாமம், பவானி சகஸ்ர நாமம் ஆகியவற்றுக்குத் தனித்தனி இருவர், விஷ்ணு ஸஹஸ்ர் நாமம், சிவ ஸஹஸ்ரநாமம், லகஷ்மி சூக்தம், தேவி சூக்தம், நாராயண ஹருதயம், லெகூஜிமி ஹ்ருதயம், நாராயண ஜெபம், அமிர்த மிருத்யும் ஜய ஜபம் ஆகியவற்றுக்கு அறுவர் நவக்கிரக ஜபத்திற்கு ஒன்பதின்மர் ஆக அறுபதின்மர் கலந்துகொண்டு பாராயணம் ஜபம் முதலியன நடத்துவர்" விஜயதசமி ஊர்வலத்தில் வருபவர் விஜயதசமி நாளில் அரசர் பரிவாரங்களுடன் ஊர்வலம் வருவது வழக்கம். அவ்வூர்வலத்துக்கு யார் யார் உடன் வரவேண்டும் என்று ஒரு திட்டம் வகுக்கப் பெற்றிருந்தது. கலெக்டர், அவருடைய உதவியாளர், ஹாஜார் கச்சேரி ஹவில்தார், சிரஸ்தேதார், லாயம் சிரஸ்தேதார், துபாஷி அவருடைய உதவியாளர்கள், தலைமை ஜவாப்நீஸ், தேவஸ்தானம் மத்தியஸ்தர் (கோயில் மேலாளர்), காவல் மத்தியஸ்தர், கஜானாகாரர், தரலுகா தாசில்தார், செளகிதார், பாளை யக்காரர்கள், மிராசுதாரர்கள், அணக்குடி பிள்ளை, வடபாதிமங்கலம் முதலியார், கலியாணபுரம் வரதையங்கார், காசித் தம்பிரான் ஆகியவர்கள் உடன் வருவ தற்குரியவர் ஆவர்.'அ இங்ங்ணம் செல்ைைகயில் 21 குண்டுகளும், வரும்கால் 21 குண்டுகளும், வன்னிமரம் பூசை செய்யுங்கால் 21 குண்டுகளும் போடுவது வழக்கம், ஒரு வட்டத்துக் கிராமம் வேறொரு வட்டத்தில் சேர்த்தல் ஒரு வட்டத்திலுள்ள ஊர் வேறொரு வட்டத்தில் சேர்க்கப்பட்டால்," அவ்வூரவர் சர்க்காருக்கு 2 சேர் வெள்ளி கொடுப்பது வழக்கம் ஆகும். இது, _ - 76. 1-59 77, 11-20, 21, 22, 77.அ. ச. ம. மோ.த. 6-18 78, 2-155, 156, 157 . .