பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359 " வட்டம் திருவாரூர் மாஹல் தாலுகா பொன்னவாசல் மாகாணம் கிராமம் கீழராதாநல்லூர் தென்பாதி சேர்ந்ததற்காக வெள்ளி எடை சேர் 2" என்றும், " வட்டம் காடாரம்பம் மாஹல் தாலுக்கா கலப்பால் ( களப்பாள் ), மாகாணத்தில் சேர்ந்த கிராமம் வட்டம் மன்னார்குடி மேல்முகம் தாலுகா ரங்கநாதபுரம் சேர்வை நரவழி கலப்பால் (களப்பாள்) அனந்தராமையன் சேத்தி சேர்ந்ததற்காக வெள்ளி எடை சேர் 2 " - என்றும் வந்துள்ள குறிப்புக்களால் உறுதி எய்தும்.

நகை செய்பவர் முச்சலிக்கை தருதல் அரண்மனையில் பலப்பல காலங்களில் தங்கம் வெள்ளி நகைகள் செய்தமை எதிர்பார்க்கக் கூடியதே. அங்ங்னம் செய்யுங்கால் ப்ொற்கொல்லர் முச்சலிக்கை ஒன்று எழுதித் தருவர். o " அரண்மனையில் தங்கம் வெள்ளி நகைகளின் வேலை பார்த்துவரு கிறோம்; தவறுதலாக வேலையில் பிசகு ஏற்பட்டாலும் வைத்த இடத்தில் காணாமற் போய்விட்டாலும் சர்க்கார் சொல்லும் தொகைகளுக்கு நாங்கள் எங்கள் வீடு வாசல்களை ஈடு செய்து கொடுக்கிறோம்" என்பது முச்சலிக்கை வாசகம் ஆகும்." யானைக்குப் பட்டம் கட்டுதல் 1842இல் விநாயக சதுர்த்தி இரவு 10 நாழிகைக்குப் பட்டத்து யானை " விஜய எசவந்த " இறந்தது. பிள்ளையார் ரதத்தில் சக்கரம் தாழ்வாகிக் கட்டி யானையை " ம்ல்லாக்கப்' படுக்கவைத்துத் தலையில் போர்வை மூடிப் பூமாலைகள் போட்டு, வண்டிக்கு முன் கொம்பு தம்பட்டத்துடன் சென்று அடக்கம் செய்தார்கள். மறுநாட்காலை " விஜயபிரதாப " என்ற யானைக்குப் "புண்ணியாக வாசனம்" செய்து பட்டம் கட்டித் தாஸ்தான் மால் தோட்டத்தில் " முகூர்த்தம்' செய்தனர். பின்னர் யானையைச் "சிங்காரித்து" நகரத்தைச் சுற்றி வரச் செய்தனர்." பொதுமக்கள் தருமம் செய்தல் அறம் செய விரும்பும் மக்கள் தம்மால் ஆன அறங்களைச் செய்துள் ளனர். கி. பி. 1779இல் ராஜபூரீ சிம்மராஜ நரஹரி பண்டிதர் நரசிங்கம் பேட்டையில் புது அக்கிரகாரம் கோயில் அமைத்தார்.” வல்லத்து "இஞ்சினியர்" 79. 11-226 80, 11-227 81. ச. ம.மோ. த. 5-14 82. ச. ம. மோ. த. 9.26 83. ச. ம. மோ. த. 4-10