பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 சிதம்பரம்பிள்ளை கோட்டைக்குள் அய்யங்குளம் வடகரையில் ஒரு கோயில் கட்டினார். " அது பழுதாயிருக்கிறது . அதைப் பழுதுபார்க்க வேண்டும் என்று 2-5-1846க்குரிய ஒரு கடிதம் உள்ளது, மேலும் அவரே கோட்டை வெளியில் நந்தவனம், தண்ணிர்ப்பந்தல், கஞ்சிச்சாவடி, பசுக்கள் தண்ணிர் குடிக்கத் தொட்டிகள் அமைத்தார்." ராமப்பா என்பவர் வல்லத்துக்குப் போகும் வழியில் இருக்கும் குளக்கரைப் பக்கத்தில் சிவாலயம் கட்டி நந்தவனம் செய்து சரபேந்திரபுரம் என்று புதியவூர் அமைத்து அன்னதத்திரம், துவாதசிக்கட்டளை, அந்தணர்க்கு உணவு, தண்ணிர்ப் பந்தல் ஆகிய்வற்றை அமைத்தார்." - ‘. . . . நரபலி வடக்கு வீதியில் ராமராவ் ஜாதோ என்பவர் வடக்கேயிருந்து ,பட்டு" என்ற பைராகியை வரவழைத்து, மேலவீதி சோமநாத பண்டிதர் வீட்டில் இருக்கச் செய்தார். ஒரு " ஜெப சாலை " அமைத்துப் பிராமணர்களைக் கொண்டு ஜெபம் செய்விக்கப்பட்டது. அன்றியும் ராமசாமி கோயிலில் பத்திரகாளி சிலையை அமைத்துக் காளிக்குப் பலி கொடுத்தால் காளி நேரே தோன்றுவாள் என்று கருதினார். ஆகவே ஒரு பெண்ணைப் பலியிடுவதற்கு விலைக்கு வாங்கினர். இச்செய்தியைச் சுப்பராம சாத்திரி என்பவர் ரெஸி டெண்டுக்குத் தெரிவித்தார். ரெஸிடெண்டு விசாரித்தபொழுது சர்க்காரி லிருந்து மறுப்பு வந்தது. இதனால் நரபலி தவிர்க்கப்பட்டது என்று அறியப் பெறும்." அரசர் பெயரால் ஊர் அமைத்தல் மேல் வல்லத்துக்குப் போகும் வழியில் சரபேந்திரபுரம் என்ற பெயரில் ஊர் அமைத்தது கூறப்பெற்றது. கி. பி. 1762 துளஜா ராஜா பெயரால் ஒரு ஆர் ஏற்படுத்த முகூர்த்தம் செய்யப்பட்டது. தத்தாஜி அப்பாவுக்குக் கும்பகோணத்தில் 50 வேலி சுரோத்திரியம் கொடுத்து அதற்குச் சரபோஜி ராஜபுரம் என்ற பெயரிடப்பெற்றது. மாரியம்மன் கோயிலுக்குக் கிழக்கே சந்தை முதலியன நடத்தும் பகுதிக்கு யமுனாம்பா பேட்டை" என்று 1788 இல் பெயர் தரப்பெற்றது. ஊர்களுக்குப் பெயர் மாற்றுதல் கி. பி. 1786இல் அமர்சிங்கர் காலத்தில் மீனமேஸலுக்கு ராஜகுமாராம்பா புரம் என்றும், இராஜாமடத்துக்கு மோகனாம்பாபுரம் என்றும் பெயர்கள் மாற்றப் பெற்றன. யமுனாம்பாள்புரம் என்பது நீடாமங்கலத்துக்குரிய மறு பெயர் ஆகும்." ராஜம்மா பேட்டைக்கு அம்மாபேட்டை என்று பெயர் மாற்றம் 84. 6-100, 101 85. ச. ம. மோ, த. 28.84, 85 86. B-140 முதல் 147 வரை ; 5-244 முதல் 252 வரை. 87. 1-147 88. 2-221 89. 8-154, 158 90, 7–781