பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

866 பூரீபிரதாப விரகரவாலினி பற்றிய குறிப்பு விரகரவாலினி என்பது அரசாங்க முத்திரையாகும். இது கரவிரவாளினி என்றிருத்தல் வேண்டும் , தஞ்சையில் மராட்டியர் அரசு அமைத்தபொழுது முத்திரையைச் செய்த தொழிலாளி " கரவீர" என்பதை " வீரகர' என்று தெரியாமல் மாற்றினராதல்க வேண்டும்; அங்ங்னமே பின்னர் வழக்கில் வந்திருக்கக்கூடும் கரவிரவாஸினி ' என்பது மகாலகஷ்மியைக் குறிக்கும் , கரவீர என்பது கோலாபூர் : இக்கரவீரத்து மகாலசஷ்மி அம்பா பாய் என்றும் குறிக்கப்படுவர்; அம்பாப்ாய் கோலாபூர் அரசரது குலதெய்வம் ஆகும்: இதுபோன்று கருதப்படும் தெய்வம் பவானி " அம்மன்: இப்பவானியே சிவாஜி போற்றிய கடவுள் ஆவர். பிரதாப என்பது பிரதாப கடாவில் உள்ள தெய்வத்தைக் குறிப்பதாகலாம் ; பிரதாப கடா என்பது சதாரா மாவட்டத்து மஹாபலேசுவரத்திலுள்ளது. ஆகவே கோலாபூர் சதாரா ஆகிய இவ்வீரிடங் களிலும் ஆட்சிபுரிந்த அவரது இரு தெய்வங்களை இந்த முத்திரை குறிப்பதாக இருக்கிறது. பிரதாப என்பது வலிமை அல்லது பெருமை என்ற பொருளுடைய தாகவும் கருதப்பெறலாம் - இங்ங்னம் மகாராட்டிரத்துப் பேராசிரியர் எஸ். ஜி. துல்பூல் ( Prot, s. G.Tulpule) கருதுவது அறியத்தக்கது." ஆண்டு முதலியன குறிப்பிடுதல் ஆண்டு நாள் இவற்றைக் குறிப்பிடுதல் மிகச் சிறந்த முறையில் இருத்தல் குறிப்பிடத் தக்கது. சகரயாண்டு குறிப்பிடுதல் பெரும்பான்மை யென்னலாம். அதனுடன் பிரபவாதி ஆண்டுடன் சாந்திரமான முறைப்படி மாதம் பகஷம் திதி நாள் என்பவையும் குறிப்பிடப்பெறும்; ஒரெடுத்துக்காட்டு : நிஜ ஆஸ்விஜ பகுள திரிதியா உபரி சதுர்த்தி ஸ்திர வாரம் அருணோ தயம் சாலிவாகன சகே 1744 சித்ரபானு நாம சம்வத்ஸ்ரம் ஸ்ப்பர் 17வ் ' ஆஸ்விஜம் என்பது புரட்டாசித் திங்கள். சாந்திரமான முறையில் மாதங்களை எண்ணுங்கால் சில ஆண்டுகளில் 13 மாதங்கள் வரும். ஏதாவது ஒரு மாதம் இரட்டிக்கும். இரட்டிப்பின் முதல் மாதத்தை " அதிக மாசம் ' என்றும், அடுத்ததை " நிஜ மாசம் ' என்றும் கூறுவர். 136 அ. இங்கனம் தற்சேயலாய் நிகழும் சொல் மாற்றத்தை ஆங்கிலத்தில் Spoonerism) என்று குறிப்பிடுவர் எனத்தெரிகிறது * * --- 1364, Р. 38, The Modi Documents from Tanjore in Danish Collections - Edited. Translated and Analysed by Elisabeth Strandberg (Franz Stainer Verlag, Wiesbaden) 1983 137. 10-74.