பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 னார் வாஜபேயம், பெளண்டரீகம் முதலிய யாகங்களைச் செய்தவர்; இந்த யாகங்களைச் செய்ய இரண்டாம் சரபோஜி பேருதவி புரிந்தமையோடு வாஜ பேய யாகத்தின் ஒரு அமிசமாகிய ' சுவேதா சத்ர தாரணம் " ஆகிய வெண் குடை பிடித்துக் கொள்ளுதற்குரிய வெண்குடைச் செலவும் கொடுத்தார்கள் " என்பன அறியப்பெறும். இக்குறிப்பில் கண்ட பெளண்டரீகம் என்பது புண்டரீகம் என்ற வேள்வி யாகும். இது 36 நாட்கள் செய்யப்பெறும். இதற்கு ஏகாதசராத்ரம், மகா விரதம் என்ற பெயர்களும் உண்டு. மேலே கண்ட ராம வாஜபேயருடைய பெரிய தகப்பனாருக்கு, வாஜ பேய வேள்வி செய்யுங்கால் இரண்டாம் சரபோஜி வெண்குடையும் பிற செலவு களும் செய்து கொடுத்து வேள்வியை முற்றுவித்தார். இங்ங்ணம் சிவராமபுரி ராமா வாஜபேயர் - தம் பாட்டனார். தந்தை பெரியதந்தை, தாம் - ஆகிய யாவரும் வாஜபேயம் செய்து சிறப்புற்றமையால் சர்வதோமுகம் ' என்ற வேள்வியைச் செய்யவேண்டும் என்று வேண்டி யிருக்கிறார். இது "அபூர்வ கிருது - புதிதாகச் செய்யப்பெறுவது. அக்னிஷ்டோம யாகமும் இரண்டு சோடசி யாகங்களும் செய்தால் சர்வதோமுகம் ' என்று பெயர். இந்த வேள்வியைப் "பஞ்சநத கூேடித்ரத்தில்' அதாவது திருவையாறு எனும் தலத்தில் செய்யவேண்டும் என்றும், மகாராஜா அவர்கள் செலவு கொடுத்து யாகத்தை முற்றுவிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்." சோடசி ' என்பது அக்னிஷ்டோமம் போலவே ஐந்து நாட்கள் செய்யப்பெறும் வேள்வியாகும். அக்னிஷ்டோமத்திற்கு 12 தோத்திரங்கள்; . உத்தியம் ' என்ற வேள்விக்கு மேலும் 3 தோத்திரங்கள். அப் பதினாறா வதாகிய தோத்திரம் " ஷோடசி ஸ்தோத்ரம் " என்ற ஒரு நீண்ட தோத்திரம் ஆகும். இந்தப் பதினாறாவதுடன் இவ்வேள்வி முடிவதால் இந்த வேள்விக்கு ஷோடசி (16) என்று பெயர். வைசுவ தேவம் ராஜேபூரீ சோமநாத சதாசிவ பண்டிதர் 1836இல் வைசுவ தேவம் தொடங்கினார் என்று ஓராவணக்குறிப்பு" உள்ளது. வைசுவ தேவமாவது விசுவதேவர் பொருட்டு நாடோறும் பகலில் உண்பதற்கு முன் செய்யும் சடங்கும் ஆகும். விசுவதேவர் என்பவர் தேவசாதியில் ஒருவகையினர். 9. ச. ம. மோ. க. 4-97 10. ச. ம. மோ, க. 12-98 11. Tamil Lexicon, M. U,