பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375 தர்ச பூர்ண மாலா இது சுக்கில கிருஷ்ண (வளர்பிறை தேய்பிறை) பிரதமைகளில் (முதல் நாள் , செய்யும் சிரொளதச் சடங்கு." சிரெளதமாவது வேதத்தில் விதிக்கப் பட்டது என்று பொருள்படும். 1836இல் வெங்காஜி ரக்மாஜி என்பார் " தர்ச பூர்ண மாஸா " என்ற சடங்கினைச் செய்ததாகத் தெரிகிறது.' ஆயஸ்தம்ப சோம பூர்வக அதானம் ஆபஸ்தம்பம் என்பது தைத்திரீய சாகைக்குரியது. தைத்திரியம் என்பது யசுர் வேதம். இந்தச் சோமயாகம் எசுர்வேதிகள் செய்வதாகும். ராமையா வராஹப்பையா 1836இல் இந்த யாகத்தைச் செய்திருக்கிறார்." சோமயாகம் என்பது யாகங்களுக்குப் பொதுவான பெயர். முத்துக்கொண்டான் சந்திர சேகர தீகூகிதரும் இந்த யாகத்தைச் செய்துள்ளார். சேனாதுரந்தரர் ராஜேபூரீ கங்காதர ரக்மாஜி என்பவர், 'போதாயன ஸோம பூர்வக யக்ஞம் ' செய்தார் என்று ஒரு குறிப்பு' உள்ளது. போதா யனம் என்பது வைதிகச் சடங்குக்காகக் கூறும் கற்பநூல் வகையாகும்." மந்திரிவர்ய பூரீ சதாசிவ கேசவ பண்டிதரும் இந்த யாகத்தைச் செய்தவராகக் காணப்பெறுகிறார்." ஆபஸ்தம்ப யக்ஞத்துக்கும் போதாயன யக்ஞத்துக்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை. குண்டல இஷ்டி

1801 : பிரதிஷ்டித சபை திவிதீயாத்யகூடி அப்பா சாஸ்திரி குண்டல இஷ்டி செய்வதற்கு இனாம் 20 சக்கரம் ' என்ற குறிப்பு" உள்ளது.

பிரதிஷ்டித சபை என்பது இரண்டாம் சரபோஜி காலத்தில் இருந்த வழக்கு மன்றங்களில் ஒன்று." திவிதீயாத்யகூஷர் என்பது இரண்டாவது நீதிபதி என்று பொருள்படும். குண்டல இஷ்டி' என்பது இன்னது என்று தெரியவில்லை. ■ அக்னிஷ்டோமம் செய்தபிறகு ' குண்டல இஷ்டி " செய்யப்பெறும் என்று ஒரு குறிப்பால்" தெரிகிறது. 1826 இல் நாகம்பட் பட்கோசுவாமியும், முத்துசுவாமி தீகூசிதர் மகன் கங்காதரரும் இந்த வேள்வியைச் செய்துள்ளனர். 12. Tamil Lexicon, M. U. 13. 12–349. 14. 12–349 15. ச. ம. மோ, த 11-35 16. Tamil Laxicon, M.U. 17. ச.ம.மோ.த. 2-21 18. ச. ம. மோ. த. 2-21 19. 2–205, 206 20. ச. ம. மோ. த. 5-84,