பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 இதுபோன்றே கி. பி. 1748இல் கீவளூரிலும் பண்டாரவாடையிலும் வெள்ளச்சேதம் ஏற்பட்டதாகவும் ஓராவணக்குறிப்புள்ளது.* மழையின்மையாலோ வெள்ளத்தாலோ பாதிக்கப்பட்ட காலத்தில் வசூல் குறைவு அல்லது குத்தகை தள்ளுபடி செய்திருத்தல் நடந்திருக்கும் என்பது உறுதி. கும்பினியார் அரசாங்க வரிவசூல் பொறுப்பும் ஏற்றுக் கொண்டிருந்தமை யால், சென்னையில் 1855இல் பஞ்சம் ஏற்பட்டபொழுது பஞ்ச நிவாரணப் பணிக்காகத் திங்கள் ஒன்றுக்கு ரூ. 200 வீதம் ரெஸிடெண்டு வழி அனுப்பப் பெற்று வந்தது என்று அறிய வருகிறது." - மேலும் ஹைதர் அலி படையெடுப்பு, முகம்மது அலியின் கடுமையான வசூல்" ஆகிய இவற்றுடன் மிக்க மழையாலும், மழையின்மையாலும் தஞ்சை மராட்டியர் ஆட்சியின் கீழ் வாழ்ந்த குடி மக்கள் பல சமயங்களில் துன்புற லாயினர் என்பது தெரிய வருகிறது. 22. 4–78 23. ச. ம. மோ. த. 4-29. 24. Losth 807, 808, Maratha Rule in the Carnatic — Srinivasan, C. K. 25. பக்கம் 805 டிெ டிை