பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 திரெளபதாம்பாபாயி எழுதியுள்ளார். சிவ்ராவின் மகன் ஜீவட்ராவ் என்ற பெயரினர்.8 வக்கீல் : துளஜாவுக்கு வக்கீல் ஆக இருந்தவர் திரியம்பக ஸம்பாஜி ஆவர்." அமர்சிங்குக்கும் அவரே வக்கீல் ஆக இருந்தார்." இறப்பு: 18-4-1802இல் அவர்சிங்கு திருவிடைமருதுாரில் இறந்தார்." மனைவியும் மகளும் : அமர்சிங்கு மனைவியொருவர் 1820 வரையி யிலும் உயிர் வாழ்ந்திருந்தார். அவருக்கு 1820-21இல் ரூ. 87,500 அளித்ததாக ஒரு குறிப்பு உள்ளது." யமுனாபாய் என்று அமர்சிங்குக்கு ஒரு புதல்வி இருந்தார். அவர் 2-1-1853 ரெஸிடெண்ட் ஜே எஃப் பிஷப் அவர்கட்கு ஒரு கடிதம் எழுதி யுள்ளார். அவர் உடன் பிறந்தவருக்குச் சிவாஜி காசிராவ் என்ற மகனும் தனக்குப் பாலகிருஷ்ணசுவாமி என்ற வளர்ப்புப்பிள்ளையும் இருந்தனர். அவர்கட்கு ஒரு உடன்படிக்கை எழுதித் தன் தருமங்களை அவர்கள் மேற் பார்வை செய்யவேண்டும் என்று எழுதியுள்ளார்." இவ்வுடன்படிக்கையில் இவருக்கு ஒரு தம்பி இருந்தார் என்றும், பிரதாபசிங்கு என்பது பெயர் என்றும் தெரிகிறது. போன் : மேலேகண்ட பிரதாப சிங்குக்கு (அமர்சிங்கரின் மகனுக்கு) யேகோஜி என்ருெரு சுவீகார மகன் இருந்தார். அவர்க்குத் திங்களொன்றுக்கு ரூ. 1000 வீதம் ஓய்வூதியம் (Pension) தரப்பெற்றுவந்ததாகத் தெரிகிறது. 1878 செப்டம்பர்முதல் 1877 ஜூலை வரை ஒய்வூதியம் கொடுத்தமைக்குரிய பற்றுச்சீட்டுக்களின்படிகள் உள்ளன."அ இரண்டாம் சரபோஜி அஞ்சு அங்கணத்தின் மாடி இரண்டாம் சரபோஜி கட்டினார் என்றும் அங்கே கல்யாண மகால் மங்களவாஸம் சேர்ந்தவர்கள் இருந்தனர் என்றும் தெரிகிறது." 87. சி.254 முதல் 258 முடிய 88. 3-3 89. 8-172 90. 4-405 ; 3–268 G1. 8–228 92. 3-66 93. 1–190, 1917 93.அ. 6-480 431, 182 7-897 முதல் 702 வரை 94. 4-130.

  • - rosarabhoji had a Seraglio in true oriental fashion and the affairs of this establishment known by the name Kalyanamahal have been repeatedly before the Govt. in the Political Department. This institution firstformed about the year 1824 consisted at his death two principal and 24.