பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 விலை வாசி நெல்லின் விலையை ஒட்டியே மற்றெல்லாப் பொருள்களின் விலையும் இருக்கும் என்பது பொதுவிதி. நிலத்தின் மதிப்பும் அங்ங்னமே அமையும். ஆகவே நெல்லின் விலையை நிர்ணயித்தலும் அரசின் கடமையாக அந்நாட் களிலும் இருந்துவந்தது. நெல்-அரிசி விலை கி. பி. 1776க்குரிய குறிப்புப் பின்வருமாறு: " நாடுகளில் நெல் பிடிக்கும் விபரம் : பணத்துக்குத் திருவாதியில் 3; மரக்கால், கும்பகோணத்தில் 3; மரக்கால்: மன்னார்குடி 3; மரக்கால் மாயூரம் 3; மரக்கால் சீர்காழி 3. மரக்கால் உடனுக்குடன் ரொக்கம் கொடுக்கிறவர்களுக்கு (மரக்கால்) போட்டுக் கொடுக்கவும். " இக்குறிப்பினால், ஒரு பணத்துக்கு 3; மரக்கால் நெல் எனில் ஒரு கலத்தின் விலை 3.4 பணம் ஆகிறது. 34 மரக்கால் எனில் 34, பணம்; இது சுமார் 9 அணா ஆகிறது." 1. ச. ப. மோ. த. 8-9 2. P.309, Maratha Rule in the Carnatic, C. K. Srinivasan : 1776...“ price per Kalạm 0-9-0 (F.n. 2, Report of the Commission of 1799, Page 15)