பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 தேங்காய் . தென்னம்பிள்ளை 1843இல் தேங்காய் 100க்கு விலை ரூ.1 ( ஒரு ருபா, 14 அனா ) என்று தெரிகிறது." "1814 ஆவுடையார் கோயிலில் வாங்கிய தென்னம் பிள்ளை 215க்கு 5 சக்கரம் 3 பணம்" என்றமையால் ஏறத்தாழ 1 பணத்துக்கு 4 தென்னங்கன்றுகள் என்பது தெரியவரும். பசுக்கள் " சிவப்புப்பசு - நீளக்கொம்பு - காளைக்கன்று விலை ரூ. 5, டிை விலை ரூ. 4, வெள்ளைப்பசு டிை விலை ரூ. 4 வெள்ளையும் கருப்பும் டிை விலை ரூ. 4" என்ற குறிப்பாலும்: " ரங்கநாத, சிவப்புப்பசு 1க்கு ரூ. 8 ; பிரபாகபட் பாபா, பசு 1க்கு ரூ. 7; "என்ற குறிப்பாலும்" பசுக்களின் விலை ரூ. 4 முதல் 8 வரையிலும் இருந்தன என்றறியலாம். இவை கோதானத்துக்குரியவை. சமஸ்தானத்தில் இருந்தபசுக்கள் விலையுயர்வுடையனவாக இருந்திருத்தல் கூடும். பட்டாசு தீபாவளிக்குப் பட்டாசு வெடித்தலும் அந்நாட்களில் உண்டு. "1827: பட்டாசு கட்டு 100; ஒன்று பணம் வீதம் சக்.7-5" என்றும்,: 1839 : தீபாவளிக்குப் பட்டாசு கட்டுகள் 300 வாங்கினதற்கு ரூ. 30, வீசம் ஒன்று" என்றும்" காணப்படும் குறிப்புக்களால் பட்டாசுக் கட்டுகள் ஆரு ருபாய்க்கு 10 வீதம் கிடைத்தன என்றறியப்பெறும். இலவம்பஞ்சு "1777 : இலவங்காய் விற்றுமுதல் சுமார் 9200க்குப் பணம் ஒன்றுக்கு 200 வீதம் சக், 4-6 பணம்" என்ற குறிப்பு" இலவம் காய்களின் விலையைத் தெரிவிக்கின்றது. ரொட்டி "1811 : ரா. சிவாஜி ராஜா சாயேப் அவர்கட்குக் குடுமிக் கலியாணம் செய்வதற்கு ரொட்டி சுமார் 785க்குப் பணம் 1க்கு 125 ரொட்டி வீதம் 6 பணம்' என்ற குறிப்பு ரொட்டிகளைப் பற்றியதாக உள்ளது. 30. ச. ம. மோ, த. 5-17 31 ச.ம. மோ. க. 8-5 32. 12-806 33. 12-808, 309. 34. 4-201 35. ச. ம. மோ, த. 6-88 36, 2–114 37. 2-50