பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 கி.பி. 1777இல் அதிராம்பட்டினம் வியாபாரி கப்பலில் அரிசியையேற்றிக் கொண்டு கொழும்புக்குப் போனார். திரும்பி வருங்கால் கொட்டைப்பாக்கு ஏற்றிக்கொண்டு வந்தார். இந்தக் கப்பல் அதிராம்பட்டினம் வியாபாரி யினுடைய தாயிருக்கக்கூடும் என்றும், தஞ்சை மராட்டியர் காலத்து மலாக்கா முதலிய இடங்கட்குக் கடல்கடந்து சென்று வாணிபம் நடத்தினர் என்றும் தெரியவருகிறது. 1821இல் இரண்டாம் சரபோஜி, காசியாத்திரையில் இருந்தபொழுது, கப்பல் வேலையில் திறமை பொருந்திய ஒரு வெள்ளைக்காரனை ரூ. 180 சம்பளத்தில் நியமித்துத் தஞ்சைக்கு அனுப்பி, அவன் உதவிக்குத் தச்சர் கொல்லரைக் கொடுத்துச் சிறிய பெரிய கப்பல்களைக் கட்டச்செய்ய ஆணை பிறப்பித்தார்." 1821 மார்ச்சுத் திங்கள் ஐந்தாம் நாள் கல்கத்தாவில் கப்பல் கட்டுகிற இடத்தை ( Naval Dock yard ) சரபோஜி பார்வையிட்டார். அங்குக் கப்பலின் நீள அகலத்துக்குத் தகுந்தபடி ஒரு பள்ளம்; கப்பலின் உயரத்துக்குத் தக்கபடி ஆழம் , சுற்றிலும் இறங்குவதற்குரிய படிகள் கப்பலுக்கு நங்கூரம் அப்பள்ளத்திற்கு மேற்புறம் கங்கையாறு, ஆற்றுநீர் பள்ளத்திற்கு வராம லிருக்கப் பலவகைக்கதவுகள்; ஊற்று நீர் தேங்கினால் அந்நீரை அப்புறப் படுத்தும் குழாய்கள் - கப்பல் வேலை முடிந்ததும் கதவுகளைத் திறந்தால் கங்கையாற்று வெள்ளம் வந்து நிரம்பும்; கப்பலை எளிமையாகக் கங்கை யாற்றுக்குக் கொண்டுசெல்ல முடியும். இங்ங்னம் 25-7-1821இல் காசியின்று எழுதிய கடிதத்தில் கண்டிக்கிறது." . . . . . . கல்கத்தாவில் வாங்கிய சாமான்கள் அங்கிருந்து நாகைக்குக் கப்பலில் ஏ ற் றிய னு ப் பிய தா. க த் தெரி கிற து.' இதனான் கல்கத்தாவினின்று தென்னாட்டுத் துறைகட்குக் கப்பல் போக்குவரவு இடையீடின்றி நடை பெற்றது என்பதும் உறுதி. -- கப்பல் கட்டுவதற்குச் சுரபுன்னை மரங்கள் பயன்பட்டன; சாலுவ நாயக்கன் பட்டினத்தில் கப்பல்கள் கட்டப்பட்டன: "பெரிய கப்பலின் வேலையும் பழக்கப்படி நடந்து கொண்டிருக்கிறது" என்ற 1822க்குரிய குறிப்பு, பெரியகப்பல் கட்டும் தொழிலில் சர்க்கார் ஈடுபட்டிருந்தமைக்கு எடுத்துக்காட்டாகும். கி. பி. 1826இல் சாலுவநாயக்கன் பட்டினத்தில் அரண்மனையா ருக்குக் கப்பல் இருந்ததாகத் தெரிகிறது.' 8. 1–147 9. 5–63. 10, 5-151, 152 . | 11. 5-153 12. 2–102 13. 10-74 14. 4-436