பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 கப்பல் பழுதுபார்த்து வெளியே விடப்பட்டது; கப்பலில் தண்ணிர் கசியத் தொடங்கியது. கரைக்குத் திரும்பக் கப்பல் கொணரப்பட்டது. பழுது பார்க்க மூவாயிரம் ரூபா செலவாகும் என்று தெரிந்தது. அதிகத் தொகை யானதால் அரண்மனையார் தரவேண்டும் என்று ஜேம்ஸ் ரோஸ் கேட்டார். வையாபுரி மேஸ்திரி வேலை நடக்கட்டும், அரசரைப் பார்த்துச் சொல்லலாம்' என்று ரோஸ்-க்குக் கடிதம் எழுதினார். அரசரை ரோஸ் பார்க்கச் சென்றார் ; பார்க்க முடியவில்லை. ஆனால் அரசர் பணம் அனுப்புவதாகச் சொன்னார் என்று வையாபுரி கூறினார். இரண்டு மாதம் காத்திருந்தும் பணம் வரவில்லை. ரோஸ் உடல்நிலை குன்றியது. சிலநாள் கழித்துக் கப்பல் வேலையை நிறுத்தி ரெஸிடெண்டு இடம் ரோஸ் விண்ணப்பித்தார். ரெஸிடெண்டு அரசரிடம் இதுபற்றி வினவியபொழுது மறுநாளே பணம் அனுப்பிவைப்பதாக அரசரிடம் இருந்து பதில் வந்தது. ஆனால் மறுநாளே உடன்படிக்கையை நீக்கி விடலாம் என்று அரசர் ரெஸிடெண்டுக்குக் கடிதம் அனுப்பினார். ரோஸ் 17 மாதகாலம் பழுதுபார்த்தலில் ஈடுபட்டிருந்ததாகவும் அதனால் தனக்கு அதிக இழப்பு என்றும் கூறிக் கணக்குக் கொடுத்தார்." இதற்கு 4-1-1842இல் அரண்மனையிலிருந்து ஸர்க்கேல் பதில் எழுதினார். இதன் சுருக்கம் 2-3-1842இல் ஜேம்ஸ் ரோஸ் ஸர்க்கேலுக்கு எழுதிய கடிதத்தின் முற்பகுதியில் 5 பக்கங்களில் காணப்படுகிறது. எஞ்சிய பகுதியில் ஜேம்ஸ் ரோஸ் தன் கட்சிக்கு ஆதரவான செய்திகளைக் கூறியுள்ளார். குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ஜேம்ஸ் ரோஸ் சாதாரண மனிதர் அல்லர் ; மிக்க திறமையுடையவர் ; நன்கு கணக்கு எழுதுவதில் வல்லவர் கப்பல்களைப் 'பத்தாகூலி' '.ண்டுப்பதில் மிக்க அநுபவம் உள்ளவர்; 1836இல் மேஸ்டர் பீடன் துவுருவினுடைய " வெங்கிட்ட ரெட்டி' என்ற கப்பலையும், 1837இல் பவாநகர்-அரசருடைய " தவுலாத் பிரசாத்' என்ற கப்பலையும் ' பத்தாகூலிக்கு 'ப் பிடித்து அனுபவித்தவர்”. ஆகையால் அரண்மனையாரிடத்தில் சட்டப்படிக்கு வாதாடிக் கடிதம் எழுதினார்; முடிவு விவரம் தெரியவில்லை. அரண்மனைக் கப்பலோட்டிகளின் சம்பளம் எவ்வளவு என்று தெரிய வில்லை. கம்பெனிக் கப்பலோட்டிகளுக்கு மாதம் 1க்கு 53 சக்கரம் சம்பளம் என்று ஓராவணத்தால் அறியவருகிறது. அ முலாம் பூசுதல் மராட்டிய மன்னர் மேற்பார்வையில் பல கோயில்கள் இருந்தன. கோயில்களுக்குக் கொடுக்கும் வாகனங்கள் முதலியவை வெள்ளி முதலிய வற்றால் செய்யப்பெற்றிருக்கும். அவற்றுக்குத் தங்க மூலாம் பூசுதல் நடை 17. 6-21 முதல் 56 வரை. 18. 6-56 முதல் 62 வரை 19, 6-62 முதல் 84 வரை 20. 6-77, 78, 79 20.அ. ச. ம. மோ.த. 5-25