பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 இரண்டாம் சரபோஜி காலத்தில் இத்தொழில் நன்றாக வளர்ந்திருத்தல் வேண்டும். மாத ஊதியத்துக்கு ஆள்களை அமர்த்திப் பட்டு நூற்புத் தொழிலை வளர்ச்சியடைவித்தமை பற்றிய குறிப்பு உண்டு.” அது, " வாஞ்சிலிங்கம் பிள்ளையிடம் பட்டுப்பூச்சி வேலை செய்யும் ராமச்சந்திர செட்டிக்கு 3 சக். முத்துச்செட்டிக்கு 3 சக். வாஞ்சிலிங்கம் பிள்ளை மூலம் பட்டுப்பூச்சியிலிருந்து பட்டு எடுத்து ஐந்து வண்ணப் புடவைகள் " என்பதாம். " விடோஜி லோன்ஜி வழி பட்டுப்பூச்சிகளை வாங்க ரூ. 8 ' " பட்டுப்பூச்சி திருட்டுப்போனதைப் பிடித்துக்கொண்டு வந்தவனுக்கு இனாம் ஒரு அனா' - பட்டு வேலை செய்கிற பரிமணத்திற்கு மாதம் ரூ. 2-4-0" " பட்டுப்பூச்சியிலிருந்து பட்டு எடுப்பதற்குக் கூலி ரூ. 8 ' பட்டுப்பூச்சியை வளர்க்கும் பட்டு நூல் காரனுக்கு ரூ. 3' "மராமத்து இலாகாவிலிருந்து பட்டுபூச்சி இயந்திரத்தைச் அ சொல் கிறபடி செய்து கொடுக்கிறது" என்ற குறிப்புக்களால் அரண்மனையார் பட்டு வளர்ப்பில் மிக்க ஊக்கமுடன் ஈடுபட்டிருந்தனர் என்பது தெரியவருகிறது. - " பட்டுக்கு நாகப்பழநிறமும் பச்சை நிறமும் கொடுக்கக் கூலி1-11-0. II என்ற குறிப்பால் பட்டுக்குப் பல வண்ணங்கள் கொடுத்தலிலும் தேர்ச்சி பெற்று இருந்தனர் என்பது புலப்படும்." கட்டிடத் தொழில் தஞ்சையில் உள்ள கோட்டை மட்டும் அன்றிப் பல கோட்டைகள் மராட்டிய அரசில் இருந்தன. பல மிராசுதார்கள் செல்வந்தர்கள் முதலியோர் பெரிய வீடுகளில் வசித்திருந்தனர் என்பது சொல்லாமலே அறியவரும். 23. ச. ம. மோ. த. 4-16 , 18-89 , 18-48 o: 24. 4-227 25. 4-249 26. 4-4 16 27, 4–288 28. H-231 = 28.அ பட்டுப்பூச்சி வங்காளம் சேன்னை ஆகிய இடங்களில் மூங்கில் தட்டுக்களில் விடப் படும். இத்தட்டுக்களுக்கிடையே போதுமான காற்று வசதி யிருக்க ஒரடி இடை வெளியிருக்கும். இவை சுமார் 6 அடி நீளமும் வட்ட வடிவமும் உடையனவாய் இருக்கும் "-பக்கம் 81. பட்டுச்செல்வம், கே. எஸ். லக்ஷ்மணன், பாரிநிலையம், சென்னை-1962 - - 29. 5–445 30, 4-288