பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 மகனுக்கு 4 தங்கக்காப்புக்களும், மராமத்துத் தலைமைக் கொத்தனாருக்கு எட்டு வடம் தங்கச் சங்கிலியும் பரிசாக அளிக்கப்பெற்றன. இதனால் தலைமைக் கொத்தனார்கள் கெளரவிக்கப் பெற்றமையும், அன்னோரின் தொழில் நிர்வாகத் திறமை பாராட்டுக்கு உரியதாயினமையும் தெரியவரும்.கே காகிதப் பட்டறை பனையோலையில் எழுதுவது குறைந்து காகிதங்களில் எழுதும் பழக்கம் மராட்டிய மன்னர் காலத்தில் மிகவும் பெருகிற்று என்பது சரஸ்வதி மகாலிலும் சென்னை ஆவணக்காப்பகத்திலுமுள்ள மோடி ஆவணங்களினின்று அறியப்பெறும். i. மன்னார்குடி, கும்பகோணம், பந்தநல்லூர், திருக்காட்டுப்பள்ளி, திருவாரூர் ஆகிய ஊர்களில் காகிதப்பட்டறைகள் இருந்தன. இவ்வூர்களில் பலவிதமான காகிதங்கள் தயார் செய்து சர்க்காருக்கும் கும்பினிக்கும் வேண்டிய காகிதங்கள் கொடுக்கப் பெற்றுவந்தன." - இவ்வைந்துார்களிலும் சேர்ந்து 19 சாவடிகள் இருந்தன; 21 பங்குகள். பங்குதாரர்கள் தம் பங்கை விற்க விரும்பினால், "21 பங்காளியைச் சேர்ந்தவரில் யாருக்கு வாங்கச் சக்தியிருக்கிறதோ அவருக்கு விற்கவேண்டும்: வேறு யாருக்கும் விற்கக்கூடாது" என்ற நிபந்தனை,இதுத்து காகிதம் செய்து விற்கும் உரிமை இந்த 21 பங்குதாரர்களுக்கே அந்நாளில் இருந்தது போலும். ஒரு பங்குதாரருடைய வேலையாள் -தேங்காய் வியாபாரி-இராமசாமி என்ற பெயருடையவர் -கும்பகோணத்தில் தனியாகக் காகிதப் பட்டறையை ஏற்படுத்திக் காகிதம் செய்து விற்பனை செய்யத் தொடங்கினார். அவர் அங்ங்னம் செய்வதால் மேலே கூறப்பட்டவர் காகித வியாபாரத்தை விட்டுவிட வேண்டும்; ஆகையால் புதிய காகிதப்பட்டறை தொடங்கியவருக்குத் தடை விதிக்கக் கலெக்டரிடம் பரிந்துரை எழுதியனுப்ப வேண்டும் என்பது ஓர் ஆவணத்தில் உள்ள செய்தியாகும்." சங்கெடுத்தல் கடலில் மூழ்கிச் சங்கெடுத்தலாகிய தொழில் இருந்தது." இத்தொழில் செய்பவர்கட்கு ஆயிரத்துக்கு 12 சக்கரம் 5 பணம் கொடுத்து வந்ததாகவும், பிறர் 14 சக்கரம் கொடுப்பதால் சர்க்காரும் 14 பணம் தரவேண்டும் என்றும் 33.அ. ச. ம, மோ. க. 10-5 34. பந்தால்லுனர் (திருப்பந்தணைநல்லூர் ) க்குச் சேர்ந்தாற்போல் இருக்கும் சிற்றுார் இக்காளில் காகிதப்பட்டறை என்ற பெயரால் வழங்கப்படுகிறது. 35, 36, 2-86, 87, 37, 2-88 38. 1-884