பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

399 ஆதம் முத்துத்துரை என்பவர் சர்க்காருக்கு 1780இல் விண்ணப்பித்து இருக் கிறார். இத்தொழிலால் முத்துக்கள் கிடைத்தமையோடு சங்கினால் செய்ய லாகும் பொருள்களும் செய்யப்பெற்றனவாதல் வேண்டும். நெட்டி வேலை செய்தல் நெட்டியினால் கிளிகள் கரும்பு முதலிய பொருட்கள் தயாரித்தல் ஆகிய சிறுதொழில் அந்நாள்களிலும் உண்டு." இரண்டாம் சிவாஜி இறந்தபிறகு 28-7-1858இல் ரெஸிடெண்டு அரண்மனையைச் சுற்றிப்பார்த்த பொழுது சில பொம்மைகளைப் பார்த்து "இவை எதனால் செய்யப்பெற்றன ?' என்று கேட்டார்: "அவை நெட்டியினால் இவ்வூரில் செய்யப்பெற்றன" என்று பதில் கிடைத்தது.' மர, உலோக, தந்த, வேலைகள் மரத்தினால் உருவங்கள் செய்யப்படுகிற தொழிலும் நன்கு நடை பெற்றது." இங்ங்னம் தச்சுத் தொழிலோடு செம்பு முதலிய உலோகங்களால் தெய்வத் திருவுருவங்கள் வார்த்தலும் ஓங்கியிருந்தது.' - சைதாம்பாபாயி வீரராகு மூலம் யானைத்தந்தம் பொம்மைகள் வாங்கிய தற்கு 6 வராகன்' என்ற குறிப்பு' யானைத்தந்தத்தினால் வேலைப்பாடு அமைந்த பொருள்களைச்செய்யும் தொழில் அந்நாளிலும் மேம்பட்டிருந்ததாதல் வேண்டும். இசைக்கருவிகளைத் தயாரித்தல் தஞ்சை இசையில் சிறப்பிடம் பெற்றது என்பது தெரிந்ததே இந்நாட்டு இசைக்கருவிகளும், மேல்நாட்டு இசைக்கருவிகளும் பயிலப்பட்டு வந்தன. மன்னரும் இசைக்கருவிகள் இயக்குவதில் வல்லவர். பிற இசை வல்லுநர்களும் பல்கி இருந்தனர். ஆகவே இசைக்கருவிகளைத் தயாரித்தல் - அவற்றுள்ளும் வீணைகள் தயாரித்தல் சிறந்த தொழிலாக இருந்தது என்பது மிகையாகாது. அச்சுத் தொழில் சரபோஜி அச்சகம் ஒன்று நிறுவினார் ; அது கி. பி. 1807க்கு முன்னரே நிறுவப்பெற்றதாதல் வேண்டும்." இவ்வச்சகம் கல்யாண மஹால் மாடியில் இருந்தது." 8-3-1828இல் நவாப் அரண்மனைக்கு வந்தார். அச்சு 39. 8–164; 7–589 40, 1-282 41. 4-117, 176 42. 1–842 43. 1–388 44. ச. ம. மோ. த. 2-82. 45, 3–267 46, 1–247; 2–178 .آئی