பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

401 மாமாங்க சவாரிக்கு வேலைக்கார சனங்களைச் சேவகம் வைக்கிற தாய் நாங்கள் கேள்வி ஆகி வந்திருப்பதால்" என்று குறிப்பு இதற்குச் சான்று. என்ன வேலை தெரியுமென்றால், கரீதிமாலில் கரீதி பண்ணப்பட்ட தமுக்கு, தட்டு மட்டத்தட்டு, பெரியகூடை மண்தட்டு......... வேலைகளுக்குக் குச்சிகள் சிவுவோம்; வேட்டைக்குப்போனால் காடுகள் வெட்டி ஒழுங்கு படுத்துவோம்; அரண்மனைத் தோட்டங்களில் மூங்கில் வெட்டுவோம்; முள்ளு கழிப்போம்" என்ற மோடிப்பலகணியினின்று சாதாரண வேலையாட்களின் தொழில் திறம் நன்கு விளங்கும். சபர் போதல் கொழும்பு யாழ்ப்பாணம் முதலாய இடங்களுக்குத் தோணியில் சபர் போகச் சொல்லி உத்தரவு கொடுத்தார்கள் ' என்ற குறிப்பில், ' தோணியில் சபர் போதல்" என்பது காணப்படுகிறது. பாளையக்காரர்கள், சங்கு குளிக் கிறவர்கள் முதலான பேர்களைப் போகச் சொன்னதற்கு ஒருவரும் போக வில்லை என்றும், இருவர் மட்டும் போனதாகவும், மூன்று ஆண்டுக்காலம் சபர்' செய்து வந்ததாகவும், அதற்குச் சொற்ப சம்பளம் என்றும், ஓராவணத்தில்" குறிக்கப்பெற்றுள்ளது. இதில் கண்ட சபர் போதல் என்பது இன்னது என்று விளங்கவில்லை. பெண்களுக்குத் தொழில் அரசமாதேவிகளின் பணிப்பெண்கள் : அக்கா கூட்டம் ” அல்லது " அக்காமார் " என்று சொல்லப் பெற்றனர்." அவர்கள் சர்க்காரின் பரம்பரைக் குழந்தைகள் " என்றும் சொல்லப் பெற்றனர். அவர்கள் அரண்மனையில் வேலை ப்ார்த்தனர். அவர்கட்குச்சம்பளம் ரூ. 3 முதல் 7 அல்லது வேரை கொடுக்கப் பட்டது. அக்காமார் தவிர்த்துப் பிற ஏழைப்பெண்டிர் கூலி வேலை செய்தே பிழைப்பு நடத்தினர் என்று கொள்ளலாம். 55. 7-812; ச. ம. மோ. க. 15-24 56. 7-818 57. மோடி ஆவணங்களின் இடையே கிடைத்த தமிழ் ஆவணங்கள் சிலவற்றைச் சரஸ்வதிமகாலில் உள்ள புலவர்கள் பெயர்த்து எழுதியுள்ளனர். அவை இரண்டு பாகங்களாக உள்ளன; தமிழ்ப்பல்கலைக்கழத்தில் உள்ள 6, 7 என்ற பகுதிகளில் இவை காணப்பெறும் 58. 7-818 59. 4-154 51