பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

403 28-3-1821இல் "லுக்வியாத்' என்னும் மஞ்சள் நிறப்பழமும் பொதச்சி என்ற வட்ட வடிவமுள்ள கருப்புப் பழமும் வங்காள தேசத்தில் கிடைத்தன. அவற்றின் விதைகளைப்" பாங்கி" தபாலில் அனுப்பி எல்லாத் தோட்டங்களிலும் போட்டுப் பயிர் செய்ய ஆணை அனுப்பப்பெற்றது." தேண்டஸ் " என்னும் வெள்ளரி புடலங்காய்போல் இருக்கும்; மரத்தில் காய்க்கும். அதன் விதையும் வெண் கொண்டக்கடலையும், சின்ன பாகற்காய் விதையும் 4-5-1821இல் அனுப்பியும்", 26-4-1821இல் சுரைக்காய் விதை அனுப்பியும், அவற்றைப் பயிரிட்டுச் "சத்திர தருமத்துக்குக் கொடுக்க” என்று ஆணையும் உடன் அனுப்பப்பெற்றுள்ளது." 18-4-1821இல் " குலேகைரா" என்னும் பூவின் விதையும் கத்தரிக் காய் விதையும் அனுப்பப்பெற்றன." 26-6-1821இல் "சகத்தாளு, படஹாரா, பனளலா" இவற்றின் விதைகள் அனுப்பப்பெற்றன. இவற்றுள் சகத்தாளு என்னும் விதை நிலத்தில் போட்ட ஏழு மாதங்கட்குப் பிறகு இரண்டு மாதங்களில் முளை கிளம்பும் என்றும், தண்ணிர்த் தேக்கம் இல்லாத இடத்தில் விதைபோட்டு நாடோறும் தண்ணீர் விடவேண்டும் என்றும் ஆணை உடன்வந்தது" இங்ங்ணம் பலப்பல மரம் செடி வகைகளின் விதைகளை யனுப்பிப் பயிரிடச் செய்தமையான் தோட்ட வேலைத் தொழிலில் பலரும் ஈடுபட்டிருந் தனராதல் வேண்டும். கடன் தருதலும் வட்டி விகிதமும் வயலை உழுது பயிரிடும் குடிமகன் கடன் வாங்கினனோ என்பது தெரியவில்லை. பொதுமக்கள் ஒருவர் மற்றொருவரிடம் கடன் பெறுதலும், வட்டியொடு திருப்பிக்கொடுத்தலும், கொடுக்கவில்லையெனில் வழக்கு மன்றத் தில் வழக்கிட்டுப்பெறுதலும் அன்றாட நிகழ்ச்சிகளாகத் தெரியவருகின்றன." முதலாம் சரபோஜிக்குப் பிறகு, சிறப்பாகத் துளஜா அரசர் ஆன பிறகு, 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மராட்டிய மன்னர்கள் லகூடிக்கணக்கான வரர்கன்களைக் கடன் வாங்கியே நவாபுக்கும் கும்பினியாருக்கும் கொடுத்து வந்தனர். கி. பி. 1772: நவாபு முகம்மது அலிகானுக்கு வருஷத்திற்குப் பேலஜி கொடுப்பது ரூ. 4 லக்ஷம் ; தோபாவிற்கு ரூ. 30 ஆயிரம் ஆக கு. 4,30,000; மிஸ்தர் ஜாஜியிடம் இருந்து ரூ. 100க்கு 2 வீதம் கடன் வாங்கிக் கொடுப்பது" 67, 5–79 68, 5–92 69. 5-8.9 70. 5-110 71. 5-122, 128 72, 8–48 73, 8–142