பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 ' கி. பி. 1780: மேஸ்தர் சார்லஸ் லைமன் இடம் இருந்து 2: வட்டி விகிதத்தில் 6 மாதக்கடன் வாங்கின. ருபாயில் செலவு ஹொன்னம் 4000' **. வட்டி 5 மாதம் 18 நாட்களுக்கு 2 வீதம் 660 ஆக 4660 - இக்குறிப்பினால் மாதம் 1க்கு 100க்கு 2: வட்டி அதாவது ஆண்டொன்றுக்கு 30% வட்டி எனத் தெரிகிறது. (இக்குறிப்பில் காட்டிய வட்டித்தொகை 560 என்றிருத்தல் தகும் அல்லது 5 மாதம் 18 நாள் என்பதை 6 மாதம் 18 நாள் என்று திருத்தவேண்டும்). " கடன் கொடுத்தவர் கூபர் : கடன் வாங்கியவர் திரியம்பக ஸம்பாஜி, வக்கீல் ; கி. பி. 1778; கடன் புலிவராகன் 3000 ; இதற்கு வட்டி 100க்கு 2; வீதம் மாதமொன்றுக்கு என்று தீர்ந்திருக்கிறது ......... " என்ற இக்குறிப்பினாலும் வட்டி விகிதம் மிக்கிருந்தமை பெறப்படும். மேற்கண்டவற்றால் வெள்ளையர் தாம் ஈட்டிய பொருளை மிகுந்த வட்டிக்கு விட்டனர் என்பதும் போதரும். பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்பவர்கள் " ஸாவுகாரர்கள் " எனப்பெற்றனர். "அவர்கள் கும்பினிக்கு அந்தந்த கெடுவுக்குப் பணம் கொடுப்பர் : இராஜ்யத்தில் வசூலாகிற தொகையைத் தங்கள் கடனுக்கு ஈடுசெய்து கொள்வர் : லாப நஷ்டங்களுக்குப் பாத்தியப்படமாட்டார்கள் ; நெல் வாங்கினால் அமானத்து என்று வாங்குவர் ; விலை தீர்த்து வாங்க மாட்டார்கள் ; நாம் கடன் கொடுத்த தொகைக்குமட்டும் நெல் வாங்கிக் கொள்வர் ' என்ற மோடி தமிழாக்கப் பகுதியால் ஸாவுகாரர்களின் செய்தி தெரியவருகிறது." கடன் கொடுத்தவனையே வசூல் செய்துகொள்ளச் செய்வதோடு, கடன் வாங்கும்பொழுது கடன் பெற இனாமும் தாகும் கொடுக்கவேண்டி இருந்தது. இதனை, ' வட்டி 3 வீதம்; இனாம் லக்ஷத்திற்கு 5,000; தரகாணிக்கு 100க்கு 1; ராஜ்யத்தை அடமானம் வைப்பது ' என்ற குறிப்பால் அறியலாம்.' துளஜாவும் அவர்க்குப் பிறகு ஆட்சிசெய்த அமர்சிங்கும் பெருந்தொகை களைக் கும்பினிக்குக் கொடுக்கவேண்டியவர் ஆனமையாலும், அரண்மனைச் செலவுகட்காகவும் பெருந்தொகைகளைப் பலரிடம் கடன் வாங்கினர் எனத் தெரிகிறது. 74. ச. ம. மோ. க. 12-77 75. 4-405, 406 76, 5-858, 854 - 77, 5-409