பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

405 ' கடன் வரவுகள் : பட்டணம் பாபு செட்டி 50,000; முத்தையமுதலி 15,000; பச்சப்ப முதலி 5000; கம்பெனிக்குக் கொடுப்பதற்கு மேஸ்தர் சல்வன் வெள்ளைக்காரர் வழி 15,000 வாங்கப்பெற்றன. 5היו " அரண்மனைக்குக் கடன் கொடுத்தவர்கள் : கோதண்டராமய்யங்கார்; அனந்தய்யா, கோபாலராவ்; சின்னையாமுதலி முத்துமுதலி; பச்சப்பமுதலி: கூடலூர் வெங்கடாசலமுதலி, ரங்கசாமி நாயக், ரஹமத்கான்; மேஸ்தர் கேபர் டானர்-இந்த 11 பேர் கடனுக்குச் சீகாழி......... கள்ளப்பத்து மகசூல் ஐவேஜி கொடுக்கவேண்டியது' o என்ற குறிப்புக்களால் அரண்மனையாருக்குக் கடன் கொடுத்தவர்கள் பெயர் தெரிவதோடு, மராட்டிய மன்னர்கட்குப் பெருந்தொகைகள் கடன் கொடுக்கக் கூடிய மிராசுதார்கள், லாவகாரர்கள், துபாஷிகள் பலர் இருந்தனர் என்பது தெரிய வருகிறது. பணத்தை வட்டிக்கு விடும் தொழில் மிக்க லாபகரமான தொழில்-எளிமையாகப் பணத்தைப் பெருக்குவதற்குரிய வழி எனக் கருதப் பட்டமை தெளிவு. இந்த நிலை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசு மறைந்த பிறகும் நீடித்திருந்தது. இரண்டாம் சிவாஜியின் மருமகன் சக்காராம் சாஹேப் ஒரு தனிமனிதரிடத்தில்-கொட்டையூர்க் கோபால் செட்டியார் குமாரர் ராமய்ய செட்டியாரிடம், 88 ' உருப்படிகளை ' அடகு வைத்து 90 ஆயிரம் ரூபா கடன் வாங்கினார். இதனாலும் பெருந்தொகைகளைத் தனி மனிதர்களுட்சிலர் வட்டிக்கு விடும் அளவு செல்வ வளம் பெருகியிருந்தனர் என்றும், வட்டி வியாபாரம் என்றுமே சிறந்த தொழிலாக இருந்தது என்றும் அறியப்பெறும். துபாவிகள் மேலை நாட்டினர் இந்நாட்டிற்கு வந்தபொழுது அவர்கள் மொழியை அறிந்து, அவர்களோடு பேசத் தெரிந்து, இரு மொழி அறிந்தவர்களாய்ச் செல்வம் உடையவராய்ச் செல்வாக்கும் உடையவராய்ச் சிலர் இருந்தனர். அவர்கள் துபாஷிகள் எனப்பட்டனர். அவர்களுட் சிறந்து விளங்கியவர் களுள் ஒருவர் பச்சையப்ப முதலியார் ஆவர். + பச்சையப்ப முதலியார்:-"1779: கர்னல் மக்ளின் பரங்கி இவர்களின் மொழிபெயர்ப்பாளர் பச்சையப்ப முதலி இவர்களுக்குச் செலவுக்காகப் பரங்கிப் பேட்டை ஹோன்னம் 500" என்ற குறிப்பால்' பச்சையப்ப முதலி கர்னல் மக்ளின் என்பவருக்குத் துபாஷி 'யாக இருந்தார் என்றும், அவர்க்கு மாத ஊதியம் 500 ஹோன்னம் என்றும் அறியப்பெறும். 78. ச. ம. மோ. க. -ே5. 79. ச. ம. மோ, த. 5-4680. 6-197 முதல் 204 வரை 81. ச. ம. மோ. த, 4.10; 18-11, 81.