பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 தனக்காரன் நாராயண ஆசாரி" இவர்கள் இருவரும், தஞ்சாவூர்ச் சமஸ்தானம் ஹிஸ் ஹைனேசு ராஜபூரீ மகாராஜா சாயபு அவர்களுடைய ஸர்க்கேல். ராஜபூரீ பாவாஜி பண்டிதர்" அவர்களை" அணுகினர். அவர் ஆணையின் படி தக்க அலுவலர்கள் இவ்விருவரையும் விசாரித்தனர். விசாரணை செய்த நீதிபதிகளின் பெயர்களும் நன்கு தெரியவில்லை. விசாரணையின் முடிவில் அவ்விருசாராரும், சமாதானம் ஆகிப்போனபடியினால் " ஒர் உடன்படிக்கை எழுதிக்கொண்டு அதன்படி நடந்து கொள்வதாக எழுதிக் கொடுத்துள்ள்னர்." _ இரண்டு தடவை விசாரணை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. முதல் விசாரணையில், " வலங்கையில் சேர்ந்த சாதிகள் யார்? இடங்கையில் சேர்ந்த சாதி யார் ? விவரம் சொல்லுங்கோள் " என்று கேட்டதற்கு' வலங்கை சேர்ந்த சாதிகள் 22 என்றும், இடங்கை சேர்ந்த சாதிகள் ஆறு என்றும் பதில் வந்தது. அவர்கள் கூறிய பெயர் விவரம் பின்வருமாறு: வலங்கை 22 1. ரெட்டி வடுகர் 2. கமல வடுகர் 3. தொளுவ வடுகர் 4. தொளுவ செட்டி 5. வெள்ளாள செட்டி 6. குத்தி கொல்லர் 7. ரெங்காரி வடுகர் 8. சேணியர் 9. சலுப்பன் 10. இடையர் 11. சாலியக்காரன்கே 12. கோமுட்டி 13. சுண்ணாம்புக்காரன் 14. மாறாய செட்டி 15. உப்பிலியன் 16. சாணான் 17. மேளக்காரன்' 18. வலையர் 19. தெலுங்க அம்பட்டன் 20. தமிழ அம்பட்டன் 21. வண்ணான் 22. வாணியன் இடங்கை - 6 1. பேல செட்டி 2. கை காளர் 3. பள்ளி 4. படையாச்சி 5. மறவர் 6. மேளக்காரன் பிறிதொரு முறை விசாரணை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. 9. 8-26 10 8-26 (இவர் இரண்டாம் சிவாஜியின் ஸர்க்கேல் ஆலுர்) 11. 8-11 12. 8-1 12அ, சாராயக்காரன் என்றும் படிக்குமாறுள்ளது