பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

411 "ஆ" வலங்கை யெண்டும் யிடங்கை யெண்டும் நீங்கள் கட்சிக்காறங்கள் சொல்லுக்குறீங்களே வலங்கை சேர்ந்த சாதியார் யார் ? யிடங்கை சேர்ந்த சாதியார் ? அதின் விபறம் சொல்லுங்கோள் " என்பது வினா." இதற்குரிய மறுமொழியில் வலங்கை சேர்ந்த சாதிகள் 24 என்றும் இடங்கை சேர்ந்த சாதிகள் ஒன்பது என்றும் கூறப்பட்டன. முதல் விசாரணை யில் வலங்கை 22 என்று உள்ளது. இவற்றோடு கவரை செட்டி, பறையன் ஆகிய இருவரைச் சேர்த்து 24 என்றனர். முதல் விசாரணையில் கண்ட இடங்கை ஆறொடு பஞ்சாளத்தார், பள்ளன், சக்கிலியன் ஆகிய மூவரையும் சேர்த்து இடங்கை ஒன்பது என்று இரண்டாம் விசாரணையில் கூறப்பட்டது. அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில்' இருந்து படியெடுத்துக் கொணரப்பட்ட இடங்கை வலங்கை சாதியார் வரலாறு ' என்ற பெயருள்ள மெக்கன்சி சுவடியில் தொடக்கத்தில் வலங்கை 98 சாதிகள் பெயரும், அடுத்து இடங்கை 98 சாதிகள் பெயரும் காணப்பெறுகின்றன. கரிகாற் சோழன் வலங்கை 98, இடங்கை 98 என்று குடிமக்களைப் பிரித்தான் என்று முன்னர்க் கூறப்பட்டது. இங்ங்னம் ஒவ்வொரு பிரிவிலும் 98 என்று கூறப்பட்டிருக்கப் புதுக்கோட்டையினின்று வந்த இருவரும் முதல் விசாரணை யில் வலங்கை 22 என்றும் இடங்கை 6 என்றும், இரண்டாவது விசாரணையில் வலங்கை 24 என்றும் இடங்கை 9 என்றும் கூறியதன் கருத்து முற்றும் விளங்கு வில்லை. எனினும் புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த சாதிகள் அவுை மட்டுமேயாம் என்று அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தால்' அறியப்பெறும்.'

  • மேலும் மெக்கன்சி சுவடியில் கொடுக்கப்பெற்றுள்ள பெயர்களோடு ' வாக்கு மூலத்தில் ' கொடுத்த பெயர்கள் ஒத்துவரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேற்கொண்டு விசாரணை செய்தபொழுது கேட்ட மூன்றாவது

  • கேழ்வி "18.அ யிலிருந்து அவர்களுக்குரிய சச்சரவு எதனால் தோன்றியது என்பது விளங்கும்.

== முதல் விச ாரணையில், 18ஆ' உங்கள் ரெண்டு கட்சியைச் சேர்ந்த மேல்கண்ட 28 சாதியினரும் யெந்த விதமாயி பந்தல் போட்டு வாகந பிருதுகளுடன் கலியாணம் செய்து ஊர்கோலம் வருகுறது" 12ஆ. ஆவணத்தில் இருந்த வண்ணம் தரப்பெற்றுள்ளது 13, 8-5. 14. Government Criental Maruscripts Library 15. எண். R. 1572; D. 2751 16. 676ੇ 489 17. அடிக்குறிப்பு 2இல் காண்க 18. 8-6 18 அ. கேள்வி 18ஆ. ஆவணத்தில் உள்ளவாறு கொடுக்கப்பட்டுள்ளது 19, 8–2