பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 மேலும் சோழராஜா பங்கில், துளஜேந்திர மகாலில் அமைக்கப்பெற்ற சிலைகட்குப் பூசை செய்யப்பெற்று வந்தன என்ற குறிப்பால், அங்கிருந்த சிலைகள் அரசருடையனவாதல் கூடும். * . கி. பி. 1776க்குரிய குறிப்பொன்று விக்கிரகங்கள் செய்தலைப்பற்றிக் கூறுகிறது. விக்கிரகங்களைச் செய்யும் திறன் படைத்தவர் திருவழுந்துார் ஊரவர்; பெருமாள் அய்யங்கார் என்ற பெயரினர். இவர் தஞ்சையில் தங்கியிருந்து பெருமாள் மூர்த்தி செய்தார். பொம்மைகள் செய்தல் I பதினெட்டுச் சாதி பொம்மைகள் செய்யும் பேர்கள்" என்றொரு குறிப்பு உள்ளது. இதனால் பல்வேறு சாதியினரின் உருவங்களைச் செய்து நவராத்திரி கொலுவில் வைத்தனர் போலும். மரப்பலகையின் மேல் மெல்லிய சுண்ணாம்பினால் பிருந்தாவனமும், ராதா கிருஷ்ணன் சத்தியபாமா ஆதிசேடன் முதலியவர்களையும் நுட்பமாக அமைத்துச் சாயம் பூசியதாக 1858க்குரிய ஓராவணக்குறிப்பு உள்ளது." படங்கள் 8-3-1828இல் கியாப்டன் ஹரடி நவாபுடன் அரண்மனைக்கு வந்தார். தஞ்சைக் கலெக்டர் மிஸ்தர் காட்டனும் மற்றும் சிலரும் வந்தனர். அரசருடன் பேசிவிட்டு (ச்சதர்) மாடியிலுள்ள அரசர்களின் படங்களையும், வாத்தியங் களையும் பார்த்தனர் - என்று ஒரு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இவ் வெழுத்துச் சான்றினால் அரண்மனையில் மாடியில் மராட்டிய அரசர்களுடைய படங்கள் மாட்டப்பெற்றிருந்தன என்று தெரியவருகிறது. இங்ங்னம் மாடியில் டிடங்கள் இருந்தமையோடு இரண்டாம் சரபோஜியை 30-3-1826இல் பார்க்க வந்த பிஷப் ஹீபர், மன்னருடைய நூல் நிலையத்தில் மராட்டிய அரசர்களின் படங்கள் மாட்டப்பெற்றிருத்தலைக் கண்டார் என்று சொல்லப்படுகிறது." மேலே கூறப்பட்ட படங்கள் வண்ணப்படங்கள் ஆக இருந்தன பல ஆண்டுகள் நிலைத்து இருக்கும் நிலையில் அவை இல்லை என்று தோன்று 7. 4-36 8. 2–188 9. ச. ம. மோ. த.1-41 10. 4-456 11. 8-215, 216 . 12. “The Bishop paid a private visit to the Rajah who received us in his library a noble room with three rows of pillars and handsomely furnished with English style. On one side there are portraits of the Maratha Dynasty from shaji to Sivaji” – P. 166, Last Days of Bishop Heber by Thomas Robinson, 1829.