பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419 கிறது. மேலும் அவை மிகச் சிறப்பாக வரையப்பெற்றனவாக இல்லை என்றும் கொள்ளலாம்.' சித்திரம் வரைவதில் பெண்டிரும் ஈடுபட்டிருந்தனராதல் கூடும்:

1811: சித்திரக்காரி செங்கம்மாளுக்கு மாசத்திற்கு 3 சக்கரம் " என்பது இதற்கு எழுத்துச்சான்று."

கி. பி. 1816இல் இரண்டாம் சரபோஜி குதிரைச் சவாரி செய்வதுபோல 4 படங்கள் வரையப்பூட்ட 5,r.o." கி. பி. 1817இல் சித்திரக்காரன் வெங்கடப்பெருமாள், வெங்கடநாரணப் பையா ஆகிய இருவருக்கும் 700 சக்கரம் கொடுத்ததாக ஒரு ஆவணத்தால் தெரிகிறது;" காரணம் புலப்பட்டிலது. - இரண்டாம் சரபோஜி காசி யாத்திரையில் இருந்தபொழுது "படனா' (Patna) என்ற தங்குமிடத்திலிருந்து ஒரு ஆணை பிறப்பிக்கப்பெற்றது. அதன்படி ஹ-ஜூரின் படமும், இளைய திவான் சாஹேப் படமும் வரையப் பட்டன. ஹ-ஜாரின் படம் சீமைக் குதிரையில் கையில் ஈட்டியை வைத்து இருப்பது போலவும், இயைதிவான் படம் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சவாரிக்குக் குதிரையின்மேல் செல்லுவது போலவும் அமைய வேண்டும் என்பது ஆணை. படத்தின் அளவு ஒரு முழம் சதுரம். இங்ங்ணம் இவை சித்திரக்காரன் சின்னசாமி நாயக்கனைக் கொண்டு வரையப்பெற்றன.' இவை தண்ணிர்ச் சாயத்தில் வரையப்பெற்றன. இரண்டாம் சரபோஜி காசியாத்திரையில் இருந்தபொழுது இயற்கைக் காட்சிகளில் ஈடுபட்டு அவற்றை வரையச்செய்து தஞ்சைக்கு அனுப்பியிருக் கிறார். அவற்றை எழுதிய ஓவியன் தாமஸ் என்ற பெயரினன்; அவனுக்குத் திங்களொன்றுக்கு ஊதியம் 10 புலி வராகன். அவன் மசூலிபந்தர் என்ற ஊரில் இருந்தபொழுது நியமிக்கப்பெற்றான். தாம் கண்ட காட்சிகளைத் தஞ்சையில் உள்ள தம் உறவின் முறையார் யாவரும் கண்டு மகிழவேண்டும் என்ற காரணத்தால் எழுதியனுப்பியதாக, ஹஸன்கஞ்ச் என்ற முகாமிலிருந்து 18-4-1821இல் அரசர் எழுதுவித்துள்ளார்." 13. In the Maratha Durbar Hall there are large pictures ( of small artistic merit) of all the Maratha Kings beginning with Shahji father of Venkoji - P. 272. District Gazateer, Tanjore by F. R. Hemingway (1906) 14. 2-89 -- 15. 5-818, 814. 16. ச. ம.மோ. க. 18–41. 17. 5–198, 199 ... -- 18. 5–108, 109