பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 மடங்களும் தம்பிரான்களும் தஞ்சை மராட்டிய மன்னர் ஆட்சி செய்த வளம் பொருந்திய காவிரி நாட்டில் தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய மூன்று சைவ மடங்கள் உள்ளன. அவற்றுள் திருப்பனந்தாள் காசிமடமும், இக்காசிமடத் துக்குரிய காசி குமாரசுவாமி மடமும் பல ஆவணங்களில் குறிப்பிடப் பெறு கின்றன. - தருமபுரம், திருவாவடுதுறை மடங்கள் பற்றிய குறிப்பு இல்லையெனினும் அவர்தம் பரிபாலனத்தில் உள்ள திருக்கோயில்களில் இருந்த தம்பிரான்கள் பற்றிய செய்திகள் தெரியவருகின்றன. பிராமணருடைய மடங்களில் தஞ்சையிலுள்ள மடங்களும், கும்ப கோணத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடமும், வைணவர்களுக்குரிய அஹோபில மடமும் பற்றிய செய்திகள் சிலவுண்டு. திருப்பனந்தாள் பூநீகாசி மடம் திருப்பனந்தாள் பூரீகாசிமடத்தைப்பற்றி கி. பி. 1787க்குரிய பழமையான குறிப்புள்ளது. அது பின்வருமாறு: "1787 மா. சுஜான்பாயி சாயேப் அவர்கள் 1–198, 199 2. இவர் இரண்டாம் ஏகோஜி (1786-87)யின் அரசமாதேவியாவர். இந்த இரண்டாம் ஏகோஜிக்குப் பாபா சாகேப் என்றும் பெயருண்டு. இவருக்குப்பின் 1787இல் சுஜாள்பாயி ஆட்சிப்பொறுப்பு ஏற்றார் - போன்ஸ்லே, வமிச சரித்திரம் (தமிழ்) பக்கம் 84-95, சரசுவதிமகால் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, 1980 1