பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 சேர்த்து ஆண்டுதோறும் 1000 சக்கரம் வருமானம் வரக்கூடிய நிலங்களை (திருப்பனந்தாளுக்கு அருகில்) குறிச்சி தாலுக்கா " சோன்பட் அ என்ற ஊரில் சருவமானியம் செய்தார். * இவ்வாவணம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கொள்ளத் தகுவது ஒன்றாகும். தருமபுர ஆதீனத்துத் தம்பிரான் ஒருவரே திருப்பனந்தாள் காசி மடத்து அதிபராக வருவதற்கு உரிமையுடையவர் ஆவர். எனவே 1787இல் காசிமடத்து அதிபராக இருந்தவர் தருமபுர ஆதீனத்து அடியார் கூட்டத்துள் ஒருவரே என்பதை இவ்வாவணம் தருமபுர மடத்தின் சிஷ்யரான நாயிக் பண்டாரி என்று குறிப்பிட்டு, இவ்வழக்கினுக்குச் சான்று பகருகிறது. குமரகுருபரத் தம்பிரான் என்பவரிடம் நாரோபந்த் தபீர் என்பவர் மதுரைச் சக்கரம் 2000 கொடுத்தார். இதன் வட்டி வருமானத்தினின்று ராமேசுவரத்தில் வேதாத்தியயனம், தண்ணிர்ப்பந்தல், நந்தவனம் எப்போதும் நடத்த ஏற்றுக்கொண்டார். அவர்க்குப்பின் வந்தவர்கள் கி. பி. 1828வரை நடத்தினர். இக்காலத்துக் காசிமடத்துத் தலைவராக இருந்தவர்கள் நீகாசி வாசி சடையப்ப சுவாமிகள் ஆவர். இவர்கள் "நமது முன்னோர்போல் நாமும் தருமத்தை நடத்தினோம்; இப்பவும் ஒரு வட்டி கிடைக்கவில்லை. ஆகவே அந்தத் தொகையை வட்டியில்லாத ஐவேஜாக வைத்திருக்கிறோம்" என்று எழுதியிருக்கிறார். இங்குக் கண்ட குமரகுருபரத்தம்பிரான் என்பார் கி.பி.1756 முதல் 1790 வரை காசிமடத்து அதிபராக இருந்தவர்கள்" ஆதல் கூடும். இதன்பேரில் அந்த முதற்பொருளும் கைவசம் இருந்த வட்டித் தொகையும் சேர்த்து ரூ. 3500 ஸர்க்கார் இடம் கொடுக்கப்பட்டது என்று 4.அ இக்காளில் திருப்பனந்தாளுக்கு அருகில் உள்ள பட்டம்" என்ற ஊர் இதுவாக இருக்கலாம். 5. ச. ம. மோ, த, 9-28 6. தி. பி. 1720 முதல் கி. பி. 1880 வரை சாசிடித்து அதிபர்களாக விளங்கியவர்கள் வருமாறு : அதிபர் வரிசை எண் பெயர் ஆட்சியாண்டு 6. பூநீல காசிவாசி தில்லைநாயக சுவாமிகள் 1720–55 7. பூநீலபூரீ காசிவாசி குமரகுருபர சுவாமிகள் || 1756–90 * 8. பூநீலபூரீ காசிவாசி சிதம்பராக சுவாமிகள் 1790-98 9. நீலபூரீ காசிவாசி சடையப்ப சுவாமிகள்11 1798–1886 10. பூநீலபூரீ காசிவாசி கணபதி சுவாமிகள்! 1836–88 11. பூநீலழரீ காசிவாசி இராமலிங்க சுவாமிகள்! 1838–41 12. நீலபூரீ காசிவாசி சொக்கலிங்க சுவாமிகள் 1841–52 18. நிலபூரீ காசிவாசி கணபதி சுவாமிகள்1 1852-55 14. நீலயூரீ காசிவாசி இராமலிங்க சுவாமிகள் 11 1858–80 )1952( XVIII ரீ குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத்திரட்டு - நீகாசிமடம் பதிப்பு فع نن