பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 கி. பி. 1854இல் திருப்பனந்தாள் காசித்தம்பிரான் அவர்கள் இரண்டாம் சிவாஜியைக் காணச்சென்றார். அரசரைக் காண்பதற்குக் காலம் நீடித்தது. " நான் முதலாவது பேட்டிக்கு வந்திருக்கிறேன் ; அங்கு வியாஜ்ய காரியம் போகவேண்டியிருக்கிறது ' என்று தெரிவித்தார். ஸ்ர்க்கேலும் " முதலாவது பேட்டி ஆகையால் பேட்டியின் பிறகு போவது சர்க்காருக்கும் உங்களுக்கும் பெருந்தன்மை ' என்று பதில் கூறினார் என்ற குறிப்பு உண்டு." முதல் பேட்டியாவது காசி மடத்துப் பட்டத்துக்கு வந்தபின் முதல் தடவையாக அரசரைப் பார்க்க வந்தது ஆதல் கூடும். இங்ங்ணம் வந்தவர் பூரீ காசிவாசி இராமலிங்க சுவாமிகள் 11 ஆவர். o காசியில் 5 தலைமுறைகள் இருந்தபிறகு திருப்பனந்தாளில் காசிமடம் தலைமையிடம் ஆகியது. அதுமுதல் காசி மடத்து அதிபர்கள் திருப்பனந்தாளில் இருக்கத் தொடங்கினர். காசியிலுள்ள மடத்துக்குத் தலைமையிடத்திலிருந்து தம்பிரான் ஒருவரை அனுப்பிவைப்பர் : அத்தம்பிரான் திருப்பனந்தாளில் உள்ள அதிபருக்கு அடங்கி நடப்பர். இச்செய்தியைத் " திருப்பனந்தாள் ஊரிலுள்ள சொக்கலிங்கத் தம்பிரான் காசியிலுள்ள தன் மடத்திலுள்ள தம்பிரான் தனக்குக் கீழ்ப்படிந்து நடப்பது பழைய பழக்கம். பூநீகாசியாத்திரைக்கு ஹ-ஜாருடைய சவாரி சென்றபோதுகூட இங்கிருந்து போயிருந்த சட்டப்பத் தம்பிரான் காசியிலுள்ள மடத்துக்கு இப்பொழுதுள்ள அய்ஹரப்பத் தம்பிரானை நியமித்தார் ' என்ற குறிப்பு' வலியுறுத்தும். இதிற்கண்ட சொக்கலிங்கத்தம்பிரான் என்பார் 1841 முதல் 1852 வரை காசிமடத்து அதிபராக இருந்தவர்கள்" ஆகலாம். சரபோஜி காசியாத்திரை சென்ற சமயத்தில் உடன் போயிருந்த சட்டப்பத்தம்பிரான் என்பவர் 1798 முதல் 1836 வரை காசிமடத்து அதிபராக இருந்தவர்கள் ஆவர்." இதிற்கண்ட அய்ஹாரப்பத்தம்பிரான் என்பதை அய்யாறப்பத்தம்பிரான் என்று திருத்திக் கொள்ளலாம். இங்குக் குறிக்கப் பெற்ற அய்யாறப்பத் தம்பிரானைக் குறிப்பிடும் குறிப்புக்கள் நான்கு உள்ளன;" அதில் ஒரு குறிப்பு." சாசிக்கு அய்யாறப்பத் தம்பிரானுக்கும் கும்பினியின் தபால் கடிதம் அனுப்ப ரூ. 1” -- என்று உள்ளது. இதனால் காசியிலிருந்த தம்பிரான், திருப்பனந்தாளில் இருந்த காசிமடத்து அதிபரின்வழி சர்க்காருடன் தொடர்பு கொள்ளாமல் நேரிடைத் தொடர்பு கொண்டிருந்தார் என்றும், அவருடன் சர்க்காரும் நேரிடைத் தொடர்பு கொண்டது என்றும் ஊகிக்கலாம். 16. ச. ம. மோ. க. 1-188 17. 7-886 (8-125 பார்க்க) 18. அடிக்குறிப்பு 6 இல் வரிசை எண் 12. 19. அடிக்குறிப்பு 6இல் வரிசை எண் 9 20. 4-218, 258, 482; ச. ம. மோ. க. 10-8 21. 4-218,