பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

441 முன்னவர் சேமித்து வைத்திருந்த பணத்தைப் பல காரியங்களில் செலவு செய்தமையோடு, குடைகள், சாமரங்கள் முதலியவற்றையெல்லாம் வைத்தீஸ் வரசுவாமி அபிஷேகக்கட்டளைக்குரிய உலகநாதத்தம்பிரான் என்பவருக்கு விற்றுவிட்டார். அவரை " ஏன் எடுத்துக் செல்கிறீர்கள் ? " என்று கேட்ட பொழுது பழுதுபார்க்க எடுத்துச் செல்வதாகக் கூறினார். வள்ளலார் கோயிலுக்கு அவற்றை எடுத்துச் செல்லுங்கால் மாயூரத்தில் அவர் தடுக்கப் பட்டு, எல்லாப் பொருள்களையும் இழந்தார்." திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் மேற்பார்வையில் இருப்பது ஆகும். கி. பி. 1813இல் திருவிடை மருதுர்த் தம்பிரான் அரசரைக் காணவந்தார். அரசருக்குச் சாதரா T ஒன்றைக் (காணிக்கையாக) அளித்தார் என்று ஒரு ஆவணம் கூறுகிறது." மாணிக்கவாசகப்பெருமானுக்குக் குருந்தமரத்தின் கீழ் இறைவன் எழுந்தருளி அருள்பாலித்த தலம் திருப்பெருந்துறை ஆகும். அத்தலம் இந்நாளில் ஆவுடையார் கோவில் என வழங்கப்பெறும். இவ்வூரிலுள்ள கோயில் திருவாவடுதுறை ஆதீனத்துப் பரிபாலனத்தில் இந்நாளில் உள்ளது. கி. பி. 1811இல் இக்கோயில் ' விசாரணை ஒரு தம்பிரானிடத்தில் இருந்தது. அவர் திருவாவடுதுறை ஆதீனத்துத் தம்பிரான் ஆக இருத்தல்கூடும் என்று கருதலாம். அத்தம்பிரான் திருப்பண்னவாசல் ( திருப்புனவாசல்) கோயில் மேற்பார்வையாளர் ஆக இருந்துள்ளார். அத்திருப்புனவாசல் கோயில் குருக்கள், கணக்குப்பிள்ளை ஆகியோர் கோயில் சுரோத்திரிய நிலத்தை விற்றனர்; கண்டுமுதல் ஆன நெல்வகையறா கொண்டு சென்றனர்; கோயில் பூசை முதலியன சரிவர நடத்தவில்லை. இதனைத் தம்பிரான் அவர்கள் கலெக்டர் காட்டன் அவர்களிடம் தெரிவித் தார். கோவில் காரியங்களைச் சரிவரக்கவனித்தல்; சுரோத்திரியம் வகையறா வருமானத்தைச் சரிவர வசூலித்துக் கம்பெனிக்குச் சேரவேண்டியவற்றைச் சசிவர வசூலித்துக் கம்பெனிக்குக் செலுத்துதல்-ஆகிய திருப்புவனவாசல் கோவில் வேலைகளை ஆவுடையார்கோயில் தம்பிரான் சரிவரச்செய்து வந்தமையால் அக்கோயில் மேற்பார்வையை அத்தம்பிரானே செய்ய வேண்டியது. என்று ம ன் ன ார் கு டி தாசில்தார் " சன்னது" கொடுத்தார்.' இதனான் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருப்புனவாசல் கோயில் மேற்பார்வை ஆவுடையார்கோயில் தம்பிரான் இடம் இருந்தது என அறியப் பெறும். __ _ 89. அடிக்குறிப்பு 61; 4-74 முதல் 85 முடிய 90, 1-837 91. ச. ம. மோ. 80-5 56