பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 சோமாசிமாறர் செய்த வேள்வியில் இறைவன் எழுந்தருளியமையும், 6இல் திருச்செங்காட்டங்குடியில் இறைவன் சிறுத்தொண்டர் இட்ட கறியமுதுண்ட மையும், 7இல் மனுநீதிச்சோழன் மகனை முறைசெய்தமையும், 9இல் சுந்தரர் முதலையுண்ட பாலனை யழைத்தமையும் கூறப்பெற்றுள்ளன. கவேர மன்னன் மகள் காவேரி. கவேர மன்னன் தன் மகட்குத் தக்க கணவனைத் தேடிவரத் தன் அமைச்சர்களை ஏவினான். கடலரசன் தனக்குப் பெண் தேட அகத்தியரை வேண்டினான். இருவரும் வழியில் எதிர்ப்பட்டனர்; மணம் பேசினர். திருவையாறு ஐயாறப்பர் திருமுன் திருமணம் நடந்தேறியது - இதுவே இந்நூலின் கற்பனைக் கதையாகும். லாஹஜி மன்னரைச் சிறப்பித்து எழுதிய நூல்கள் 1. விஷ்ணு ஸாஹ ராஜ விலாஸம் " திரா. ஸாஹஜி ராஜ விலாஸம் கர்த்தா - ஸாஹஜி ராஜ சரித்திரம் பக்கம் 56, வரி 6 வீதம் ' என்றொரு குறிப்புள்ளது. இது விஷ்ணு ஸாஹராஜ விலாஸம் என்ற பெயரில் ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்களுள் ஒன்றாக அச்சிடப் பெற்றுள்ளது. திருமால் திருவிழிமிழலையில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சிவபெருமானை ஆயிரம் மலர்கொண்டருச்சனை செய்ய, ஒருநாள் ஒரு மலர் குறையத் தனது விழியையே மலராக அருச்சனை செய்தார். இறைவன் மகிழ்ந்து ' திருமாலே தஞ்சையில், போசலகுலத்தில் சகசி மன்னனாகப் பிறந்து தலங்கள் தோறும் வழிபட்டு வாழ்வாயாக " என்று வரமருளினார். திருமகளும் மண்மகளும் கலிங்கராசன் மகள்களாகப் பிறந்து சகசி மன்னனை மணந்தனர். - இதுவே இந்நூலிற் கண்ட கதைச்சுருக்கம். இந்நூலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. இந்நூல் பக்கம் 173-174இல், ஆரூர், திருவையாறு, குத்தாலம், திருவிடைமருதுரர், நீடுர், திருப்புகலூர், திருநீலக்குடி, குடந்தை, திருமங்கலக் குடி, திருமாந்துறை, திருப்பனந்தாள், திருக்கடவூர் மாயூரம், திருப்பாம்புரம், திருமறைக்காடு, வேளுர், திருத்துறைப்பூண்டி, திருவெண்காடு, திருநறையூர், திருவாலம்பொழில், வழுதுார், திருஅம்பர் மாகாளம்,'திருச்செங்காடு, திருமருகல், திருக்கொறுக்கை, திருநாகைக்காரோணம், திருக்குவளை ஆகிய தலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. - 5. 12-288 எண் 2872); 12.216 வீ 14 விஷ்ணு ஸாஹராஜ விலாஸம் அரவி பாஷை - 8