பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445 வாசி தீரவே' என்ற திருவிழிமிழலைத் தேவார்ம் முதற்பாசுரம் பக்கம் 180இல் திரிகாலஞானியின் தருவில் பயின்றுள்ளது. + பிள்ளைக்கறியுண்டமை, பரவைக்குத் தூது சென்றமை ஆகிய பெரிய புராணச் செய்திகள் குறிப்பிடப்பெற்றுள்ளன. *— ஒரு தருவு முழுவதும் தெலுங்கு மொழியிலேயே உள்ளது ( பக்கம் 185–186) ஸாஹஜி ஏகோஜியின் புதல்வன் என்பது " ஏகராசன் செல்வன்." (பக்கம் 189 ), "ஏகராசன் அளித்த வீர சகசிராசனே ( பக்கம் 195 ) என்ற விடங்களில் காண்லாம். 2. குறவஞ்சி " திரா. பா. கோரவஞ்சி நாடகம் - முத்துகவிராய க்ருதம் - தைலங்க பக்கம் 72 ' என்ற குறிப்பினால்" முத்துக் கவிராயர் என்பார் ஒரு குறவஞ்சி நூலைத் தமிழிற் பாடினார் என்றும், அது தெலுங்கு மொழிக்குரிய எழுத்தில் உள்ளதென்றும் தெரியவரும். இக்குறவஞ்சி நூல் " ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்களில் " ஒன்றாக வெளியிடப்பெற்றுள்ளது. " பொங்கமாய்ச் சகசி பூபதி மீதில் அங்கித மாக அருந்தமிழ் தன்னால் கருதிய முத்துக் கவியுரைத் தானே " என்ற வரிகள் பாட்டுடைத் தலைவனையும், பாடியோரையும் குறிப்பிடுவனவாம்.? இராசகன்னிகையென்பாள், " தேசமெல்லாம் பணியும் ஏகராசன் மகிழ் தீபாம்பிகை யளித்த பாலன் - சகசிராசன் " மீது காதல் கொண்டு அன்னம், கிளி, வண்டு, குயில் ஆகியவற்றைத் தூது அனுப்பிக் குறத்தியைக் குறி கேட்டு அறிந்து ஸாஹஜி மகாராசனை மணந்த செய்தி கூறுவதாக அமைந்தது இந்நூல். புலவர்கள் " நயமுத்தமிழ் நாவாணர் ' என்று குறிக்கப்பெற்றுள்ளனர் (பக். 97) - o 3 சந்திர காகாசை விலாச நாடகம் " திரா. பா. சந்திரிகாஹாஸவிலாசம்-நாடகம்-தைலங்க-கர்த்தா-பக்கம் 78 " என்றொரு குறிப்பு உள்ளது. 6. 12-290 எண் 2891) 7. ஐந்து தமிழிசை நாட்டியாாடகங்கள் பக்கம் 87: 8. ஐந்து தமிழிசைாாட்டிய நாடகங்கள் புக்கம் 125,