பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 இது தமிழ் மொழியில், தெலுங்கு எழுத்தில் எழுதப்பெற்றுள்ளது; ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்களுள் ஒன்றாக அச்சிடப்பெற்றுள்ளது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மாளவநாட்டு மன்னன் மகள் சந்திரிகாஹாஸை என்பவள் தன் தோழி சுகவாணி என்பவளுடன் திருவாரூருக்கு வந்து வன்மீகரை வழிபடுகிறாள். அப்பொழுது ஒரு சித்தர் வருகிறார்; பலதேச மன்னர்களைப் பற்றிக்கூறுகை யில் லாஹஜி மன்னரின் பெருமைகளைக் கூறுகிறார். சந்திரிகாஹாஸை ஸாஹஜி மன்னரை மணக்க விரும்புகிறாள். அவர்களுடைய பெற்றோர்களும் வருகின்றனர். அச்சித்தரே மணம் முடித்துவைக்கிறார்-இதுவே இந்நாடகத் தில் உள்ள கதையின் சுருக்கமாகும். இந்நூலில் ஸாஹஜி, ' சத்தியத்தில் அரிச்சந்திரன்; தானத்தில் இரா தேயன் (கர்ணன்), நித்தியத்தில் மார்க்கண்டேயன்; நிதியில் குபேரன்; புத்தி யில் பிரகஸ்பதி, புசபலத்தில் பீமன்; வித்தையில் ఙ్ఞా வில்லில் விசயன்' ) - என்று பலபடப் பாராட்டப்பெற்றுள்ளார் (பக்கம் 58-59 இந்நூலிலும் எலாஹஜி " தீபாம்பிகை குமாரன் ' என்று கூறப்பெற் றுள்ளார் (பக்கம் 71) 4. பூலோக தேவேந்திர விலாசம் பனை ஓலை புத்தகங்களின் ஜாபிதா-சரஸ்வதி மகால்-சுஹர்ஸன் 1264-சாலிவாகன சகே 1785 ருத்ரோத்காரி நாம சம்வத்சரம்-மஹாலில் மஜ் கூரில் ஆஜர் உள்ளபடி " என்ற குறிப்பால்" சகம் 1785 அதாவது 1863இல் நூல் பட்டியல் தயாரிக்கப்பட்டமை தெரிய வருகிறது. அப்பட்டியலில், "பனை ஒலைப் புத்தகங்களின் ஜாபிதா பிராக்ருத நாடகங்கள் " என்ற தலைப்பில்' பல ஓலைச்சுவடிகளின் பெயர் தரப்பெற்றுள்ளன. அவற்றுள் "பூலோக தேவேந்திர விலாஸம் ' என்பது ஒரு நூல்.' இந்நூல் ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்களுள் முதலாவதாக அச்சிடப்பெற்றுள்ளது. இந்நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலிலும் லாஹஜி ஏகேந்திரன் தரு சுதன் தீபாம்பிகை தனயன்" என்று பேசப்படு கிறார். (பக்கம் 29, 40) - லாஹஜியைப் பூலோக தேவேந்திரன் என்று கூறியதால் இந்நூலுக்குப் பூலோக தேவேந்திர விலாஸம் என்று பெயர் வந்தது. தேவேந்திரனோடு ஸாஹஜியை ஒப்பிட்டுத் தேவேந்திரன் முனிபத்தினியை அணைந்த குறை யுடையனாயினமையின், ஸாஹஜியே மேலானவன் என்று இந்நூல் பக்கம் 14இல் கூறப்பெற்றுள்ளது. 9. 12-292(எண் 2417);12-217. 10, 12–169 11. 12–214 12. 12-26 வரி,15)