பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

447 தீபாம்பிகை பற்றிய குறிப்பு ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்களிலேயும் ஏகேர்ஜியின் மகன் தீபாம்பிகை சுதன் ' என்று ஸாஹஜி குறிக்கப்பட்டுள்ளமை காணலாம். ஏகோஜிக்குத் தீபாபாய், அண்ணுபாய் என்று இரு மனைவியர் இருந்தனர்." தீபாபாய் இங்களே வமிசத்தைச் சேர்ந்தவர். இவர் மிகுந்த செல்வாக்குடை யவர் ; சிவாஜிக்கும் அவர் தம்பி ஏகோஜிக்கும் மனவேறுபாடு வந்த சமயத்தில், சிவாஜியின் கருத்தறிந்து அதற்கேற்ப ஏகோஜியை நடக்குமாறு செய்தார்; ஆகலின் சிறந்த அரசியல் சூழ்ச்சியுடையவர் எனத் தெரிகிறது." பொது அகனைத்திணைக்குரியனவாக இவற்றைக் கொள்வதற்கில்லை. இந்நூல்கள் யாவும் சிற்றின்பம் பற்றியனவாக வுள்ளன. எளியமக்கள் விளங்கிக்கொள்ளும் முறையில் எளிய நடையுடன் கூடிய இசைப்பாடல்கள் கொண்டுள்ளமையின் இவை நடித்தற்கு எளிமையாக இருந்திருத்தல் வேண்டும்; மக்களும் விரும்பிப் பார்த்துக் கேட்டு மகிழ்ந்தனர். ஆதல் கூடும். எல்லா நூல்களின் முகப்பிலும், " ஜயபார்வதி ரமண" என்று தொடங்கும் ' தோடய மங்கள மும் மகனிய தியாகேசுனிகி மங்களம் ' என்று தெலுங்கு மொழி மங்களமும் காணப்பெறுகின்றன. ஸாஹஜியின் பேரில் குறவஞ்சி பாடிய முத்துக்கவிராயரும், இத்தோடய மங்களத்தைத் தம் நூலுள் சேர்த்துள்ளார். இத்தோடயமங்களம் ' ஸாஹஜி மன்னரின் கிராத விலாஸம் ' என்னும் சமஸ்கிருத நாடகத்தில் காணப்படுவது என்றும், இதனை முத்துக் கவிராயரும் பயன்படுத்தினார் என்றும் டாக்டர் வே. பிரேமலதா அவர்கள் கூறியுள்ளார்." தோடயம் என்பது நாடகத்தின் தொடக்கத்தில் வருவது. ஸ்ாஹற்ஜி, துளஜா இவர்கள் இயற்றிய யகூடிகானங்களில் வாழ்த்துரைப் பாடலான நாந்தி " தோடயம் " அல்லது " ஜய " என்று கூறப்படுகிறது...... மராத்தியர் இயற்றிய யகூடிகானங்களில் தோடயம் மங்களம் என்ற இரு பாடல்களும் தொடக்கத்தில் காணப்படுகின்றன." தியாகேசர் குறவஞ்சி " தியாகராஜகொரவஞ்சி பக்கம் 66 அபூர்த்தி ஜிர்ணம் '7 13. போன்ஸ்லே வமிச சரித்திரம், பக்கம் 79. - 14. P. 240, New History of the Mahrathas-G. S. Serdesai (1946) 15. பக்கம் 98, முன்னுரை - தியகேசர் குறவஞ்சி, தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடு(1970) 16. பக்கம் 19, தமிழ் முன்னுரை, சிவகாமசுந்தரி பரிணய நாடகம், பதிப்பாசிரியர் டாக்டர் எஸ். சீதா (1971), சரஸ்வதிமகால் வெளியீடு 17. 12-29 (எண் 2441)