பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

449 HI பார்த்தால் பசுப்போல; பாய்ந்தால் புலியானாய்." ( பாடல் 11இல் 4, பக்கம் 18 ) " தீராத நெஞ்சுக்குத் தெய்வமே துணை " " வாடும் பயிருக்கு இன்ப மழைபோல " " வாசமும் மலரும் போலே ' ( பாடல் 13 ), " கையில் வரு நெல்லிக்கனி போல ' ( பாடல் 51) புலி பசித்தாலென்ன, புல்லைத் தின்பதுண்டோ " ( பாடல் 65-4) என்று பழமொழிகளில் சில இந்நூலிற் பயிலப்பெற்றுள்ளன.

"சுந்தரர் பொருட்டுப் பெருமான் பரவையாரிடம் தூது சென்றதைக், ' கவிமழை பொழியும் நம்பிக்காய்த் தூது நடந்த தியாகர் ' ( பாடல் 20, வரி 29, 30 ) ' சுந்தரர் சொன்ன பன்னு:தமிழ்க் கொரு தூதர் ' (பாடல் 35, சரணம் 3) என்றும், சுந்தரரைத் " துதிபெறு முத்தமிழுக்கரசாகிய சுந்தரர் ' என்றும் ( பாடல் 36 ), சுந்தரர் தேவாரத்தைச் "சுந்தரர் செந்தமிழ் ' (பாடல் 41 தாழிசை 17 ), " சுந்தரர் முத்தமிழ் வாழி " (பாடல் 66) என்றும் குறித்தமை போலத் தேவார மூவரையும் அவர்தம் தெய்வப் பாடல்களையும், ' மெய்யுரை செய் மூவர்தமிழ் விளங்கா நிற்கும் வாசலிது " (பாடல் 25 இல் 2) என்று இந்நூலாசிரியர் பாடியுள்ளார். இதனால் இவர் தேவார மூவரிடத்தும், மூவர் தமிழிலும், சிறப்பாகச் சுந்தரரிடத்தும் பத்திமை பூண்டவர் என்றும், செந்தமிழோர் வாழி என்றமையால் ( பாடல் 67 ) தமிழ் மக்களிடத்துப் பெரும் பற்றுடையவர் என்றும், ஏர் சிறந்த வேளாளர் எந்நாளும் வாழி " (பாடல் 67) என்றமையால் இவர் வேளாண்குலத்தவர் என்றும் அறியப்பெறும். குறத்திதோன்றுதல் என்ற தலைப்பில் 108 வரிகள் கொண்ட ஒரு அகவற்பா உள்ளது. இவ்வகவலில் முசுகுந்தன் வணங்கிய தியாகர் ( வரி 35, 35 ), மனுநீதிச் சோழன் தன் மகனை முறை செய்தமை (வரி 37-79), சிவபெரு மான் பசுவாகவும் இயமன் கன்றாகவும் வந்தமை (வரி 40) ஆகிய செய்திகள் சிறப்பாகக் காணப்படுகின்றன. குற்றாலக் குறவஞ்சி போலவும். சரபேந்திர பூபால குறவஞ்சி போலவும் சிறந்து விளங்கும் பெருமை இக்குறவஞ்சிக்கு உள்ளது. லாஹஜி காலத்துப் பிற தமிழ் நூல்கள் 1. சங்கர நாராயண விலாஸ் நாடகம் - "ஆரவி - சங்கரநாராயண விலாஸ் நாடகம்-பூர்வக சிவவிஷ்ணு சரித்திர-பக்கம் 48 ! 21. 12-287 ( எண் 2368) (12-215) 57