பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 என்ற குறிப்பால் தமிழில் சங்கர நாராயண விலாஸம்" என்ற நாடக் நூல் ஸாஹஜி காலத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. "சங்கர நாராயண கல்யாணம்" என்ற நூல் ஆபத்சகாயபாரதி என்பவரால் தமிழில். இயற்றப் பெற்றது என்று டாக்டர் சீதா அவர்கள் கூறுவர். இதுவும் சங்கரநாராயண விலாஸ் நாடகமும் ஒன்றா வேறா என்று தெரிய வாய்ப்பில்லை." 2. கும்பகோணப் புராணம் இது சொக்கப்ப நாவலர் பாடியது; ஸாஹஜியின் அவையில் அரங்கேறி யது." இந்நாளில் அச்சாகியுள்ளது. 3. வாசுதேவகவி என்பாரும் இராமபாரதி என்பாரும் ஸாஹஜிமன்னர் பேரில் சிருங்கார பதங்கள் பாடியுள்ளனர். இவற்றுள் பெரும்பாலானவை தமிழிலும் சில சமஸ்கிருதத்திலும் உள்ளன; எளிய தமிழ்; இன்பச்சுவை பொருந்தியவை; பகைஞரைப் பார்த்து எச்சரிக்கை கூறும் பாடல்களும் சிலவுண்டு. " சுற்றிச் சுற்றி யிங்கே சுழலவேண்டாம் சொன்னேன் புத்தியல்ல ஒடிப்போனால் உயிர் பிழைக்கும் எத்தன் ஏகராஜன் புத்திரன் ஸஹஜிராஜன் கத்தி கொண்டால் கையில் கத்திக்கிரையிடுவன்' என்பது ஒரு பாடலின் பகுதி. மூதலாம் சரபோஜி இவர் ஸாஹஜியின் தம்பி. இவர் ஆட்சியிலும் தமிழ்ப் புலவர்கள் ஆதரிக்கப் பெற்றனர். சிவரகசியம் என்ற நூல் ஒப்பிலாமணிப் புலவர் யாத்தது. இது முதலாம் சரபோஜியின் அவையில் 8-1-1718இல் அரங்கேறியது. இவர் அவையிலேதான் சருக்கரைப் புலவர் பாடிய' மிழலைச் சதகம் "அரங்கேறியது." 22. Sahaji was never indifferent towards fostering the Tamil Language. Many operas like Bhuloka Devendra vilasam, Rupavathi Kalyanam by Kutta Kavi, Sankaranarayana Kalyanam by Apat Sahaya Bharathi and padas composed by Ramabharathi & Vasudeva kavi belong to the reign of Sahajl (12-224) p. 85, Tanjore as a seat of Music, Dr. Seetha 23. தஞ்சை மராட்டிய அரசர் மோடி ஆவணக்கருத்தரங்கு - புலவர் வி. சொக்கலிங்கம் அவர்கள் கட்டுரை, பக்கம் 2. 24. எண் 52, வாசுதேவ கவி பாடல்கள், தஞ்சை சரஸ்வதி மகால் நூல் கிலையம், ன்வடி எண். 818 / 11849 - 25, 26. தஞ்சை மராட்டிய அரசர் மோடி ஆவணக்கருத்தரங்கு-புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்கள் கட்டுரை, பக்கம் 4-5 - - -