பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

451 இரண்டாம் துளஜா இரண்டாம் துளஜாகாலத்தில் இராமநாடகம் இயற்றிய அருணாசலக் கவிராயர் துளஜா அவைக்கு வந்து பரிசில் பெற்றதாகத் தெரியவருகிறது : "1776, தேதி 23, மாதம் செளவல்; சீயாழி அருணாசலக்கவிராயர். இவர் களுக்கு பக்வீஸ் பரங்கிப்பேட்டை ஹோன்னம் 80 சக்கரம் கொடுப்பு ' என்ற குறிப்பு" அருணாசலக் கவிராயரைத் துளஜா ஆதரித்தார் என்பதை அறிய உதவுகிறது. இரண்டாம் சரபோஜி o இவர் காலத்தில் விளங்கிய புலவர் பெருமான் கொட்டையூர்ச் சிவக் கொழுந்து தேசிகர் ஆவர். இவர் இயற்றிய நூல்களிற் சிறந்தவை கோடிச் சுரக்கோவை, தஞ்சைப் பெருவுடையார் உலா, சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் என்பனவாம். - ' கொரவஞ்சி நாடகம்-சிவகோளந்த பண்டார க்ருதம் -பிரஹதீஸ்வர மஹாத்மியம்-பக்கம் 154" என்ற குறிப்பில் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் குறிக்கப்பெற்றுள்ளது, கோவை, உலா, குறவஞ்சி ஆகியவற்றுள் வகைக்கொன்று இலக்கிய நயம் பொருந்த எழுதித் தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை அந்நாட்களில் மிகுத்த பெருமை கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகருக்கேயுண்டு என்னலாம். வைத்திய நூல்கள் இரண்டாம் சரபோஜி காலத்தில் பல வைத்திய நூல்கள் தமிழில் இயற்றப் பெற்றன என்றும், அவ்வாறு இயற்றியோர் கொட்டையூர்ச் சிவக் கொழுந்து தேசிகர், வேலாயுத வாத்தியார், திருவேங்கடத்தாபிள்ளை, வெங்க டாசலம்பிள்ளை, சுப்பராயக் கவிராயர் என்பவர் ஆவர் என்றும், அவர்கள் இயற்றிய நூங்கள் எவ்வெந்நோய்களைத் தீர்ப்பவை என்றும் வைத்தியம் ! என்ற தலைப்பிற் காண்லாம்." _ * 17ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 18ஆம் நூற்றாண்டிலும் சோழ நாட்டில் மிகச் சிறந்த புலவர்கள் வேறு பலரும் வாழ்ந்தார்கள். அவர்கள் யாத்த நூல்கள் பல. அவைபற்றி இங்குக் கூறவில்லை என்பது குறிப்பிடத் தககது. 27. ச. ம. மோ. த. 48-28 28. 12-293 (எண் 2487) 29. 12–220 30. மருந்து (அ) வைத்தியம்" அடிக்குறிப்பு 41 முதல் 44 வரை; அவற்றுக்குரிய சேய்திகளும் பார்க்க,