பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. 1798க்குப் பிறகு இரண்டாம் சரபோஜி 1798இல் பட்டத்துக்கு வந்தவர். தஞ்சை ஆட்சி முழுமையும் கைப்பற்ற முனைந்த ஆங்கிலேயர் ஒர் ஒப்பந்தம் செய்து கொண் டனர். இந்த ஒப்பந்தம் ' தஞ்சை அரசருக்கும் கும்பினிக்கும் உள்ள நட்பை பும் தொடர்பையும் வலுப்படுத்தவும், தஞ்சை ஆட்சியை நிலையான அடிப்படை யில் அமைக்கவும் ' செய்துகொள்ளப்பெற்றதாகக் கூறப்பட்டது. இவ்வொப் பந்தம் 25-10-1799இல் கையெழுத்து இடப்பட்டது. இதில் 15 பிரிவுகள் உண்டு. இவ்வொப்பந்தத்தால் இரண்டாம் சரபோஜி இடத்திலிருந்து ஆட்சிப் பொறுப்பு நீங்கியது. தஞ்சைமாநகரம் மட்டும் அவர் மேற்பார்வையில் அமைய லாயிற்று. அவருக்கு ஓய்வூதியம் தரப்பெற்றது. ஆகவே அவர் ஆட்சிப் பொறுப்பினின்று நீங்கித் தம் வாழ்நாள் முழுவதும் கலைகளின் வளர்ச்சியில் ஈடுபடலானார். தஞ்சை மாநகரம் தவிர்த்து எஞ்சிய பகுதிகள் யாவும் ஆங்கிலேயரின் நேர் ஆட்சிக்கு வந்தன. ஆங்கிலேயருடைய நேர் பார்வையில் அமைந்த ஊர்கள் 5062 என்று ஓராவணம் கூறுகிறது. இது, 1804 மேஸ்தர் ஜான் பாலிஸ் கலெக்டர் 1214ஆம் பசலி முன்னால் கம்பெனியில் கணக்கு எழுதிய வகையில் ஊர்கள் முழுமைக்கும் 5056; தற்போது அதிகமான ஊர்கள் 6 ' என்ற குறிப்பால் அறியப்பெறும். 1. “ Treaty for cementing the friendship and alliance between the Company and the Rajah of Tanjore and for establishing the Govt. of Tanjore on a permanent foundation ” –p. 109, A History of British Diplomacy In Tanjore-K.Rajayyan 2. ச. ம. மோ, த. 14-42, 48 3, 8-48 முதல் 49 முடிய