பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

463 போலீஸ் அதிகாரம் முகாசா கிராமங்களில், மராட்டிய மன்னர் நியமித்த மத்யஸ்தர்களுக்குப் போலீஸ் அதிகாரமும் அளிக்கப்பெற்றது. 27-5-1827......... ரா. மகாராஜா சாயேப் அவர்கள் நியமித்திருக்கும் மத்யஸ்தர்களுக்குப் போலீஸ் அதிகாரம் வேண்டும் என்று நாம் உத்தரவிடச் சம்மதிக்கிறோம். கும்பினியின் தாசில்தார் வகைறாக்கள் போலீஸ் சங்கதியில் எப்படி விசாரணை செய்கிறார்களோ அதேமாதிரி விசாரணை வாக்குமூலம் விதிப்பது, தண்டனை செய்வது இவற்றையெல்லாம் நமக்கு எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும். பகூடிபாதம் செய்யக்கூடாது" -என்ற குறிப்பால் கும்பினி தாசில்தார்கள் " போலீஸ்" தரப்பில் விசாரணை செய்து தீர்ப்புக்கூறுவது உண்டு என்றும், அதுபோன்றே மத்யஸ்தர்களும் செய்வதோடு கலெக்டருக்குச் செய்திகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கலெக்டர் விதித்தார். " கிராம முன்சீபுகள் " சிறுசிறு வழக்குகளை விசாரிக்கும் உரிமை உடையவர்கள் ஆக இருந்தனர். " சில்லரை வியாஜ்யம் சிறிதாயிருந்தால் கிராம முன்சிப்பின் நியாயப்படி 6 அடிகள் வரையில் அடிக்கிறது. கொஞ்சம் அபராதம் விதிக்கலாம். கொஞ்ச நேரம் காவலில் வைக்கிறது. இவ்வேலைகள் எல்லாம் செய்யலாம்" என்பது ஆவணப்பகுதி . கும்பினி போலீஸ்காரர்கள் சர்க்கார் அலுவலர் பேரில் வழக்குத் தொடுக்க வேண்டியிருப்பின் சர்க்காருக்குத்தான் தெரிவிக்கவேண்டும். அது கலெக்டருக்கு விசாரணைக்கு வந்தால் அதைக் கலெக்டர் ஏற்றுக்கொள்ள மாட்டார்; தள்ளிவிடுவார் என்றும் தெரிகிறது." மேலும் தோட்டம் வகையறாவின் போலீஸ் ( மாஜிஸ்ட்ரேட் ) அதிகார மும் ஸர்க்காருக்குக் கொடுக்கப்பெற்றது ; எனினும் இதில் சிறிது தொல்லை உண்டு. ஒரு பெரிய ஊர் : அதில் முகாசாவின் சிறிய தோட்டம் , அதில் 7. 1-77 8 1-78, 79. 1816ஆம் ஆண்டு கிராமமுன்சிபுகளைக் குறித்த சட்ட த் தி ள் படி (அ) 10 ஆர்க்காட்டு ருபாய்க்கு மேற்படாத அசைக்கப்படும் சொத்தைக்குறித்த வழக்கு களை விசாரித்துத் தீர்ப்புக்கூறலாம். அதற்குமேல் அப்பீல் இல்லை. (ஆ) 100 ரூபாய் வரையில் ஆயின் இருசாராரும் இசைவு தரின் தாம் குடியிருக்கும் கிராம முன்சிபு விசா ரிக்கலாம். (இ) வழக்குக் தொடக்கம் 12 ஆண்டுகட்குமேல் இருத்தல் கூடாது. (ஈ) குற்றவியல் ஆயின் விசாரிக்க உரிமை இல்லை. 9, 1-81