பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 சிப்பாய்கட்குப் பயிற்சி படையில்லாத மன்னவர்கள் ஆகிய காலத்திலும் தற்காப்புக்காகவும், வசூல் முதலியவற்றுக்காகவும், கலவரங்களை அடக்கவும் பெயரளவில் சேனையும், சேனைகளுக்குத் தலைவர்களும் இருந்துவந்தனர். சிறிது சிறிதாகப் படைக்குறைப்புச் செய்யப்பெற்றுவந்தபோதிலும் இரண்டாம் சரபோஜியின் ஆட்சித்தொடக்கத்தில் கணிசமான சேனை இருந்ததாதல் வேண்டும். இதனை, ' 1801இல் பத்தாவது சண்டைப்பட்டாளம் ' ' 1801: திவான் சாகேப் அவர்கள் தசரா பண்டிகைக்குச் சிலங்கண சவாரிபோய் வந்த துருப்புக்களுக்கு இனாம் கொடுத்த வகையில் 800 ரூபர் வழக்கப்படி ஆளுக்கு 5 பணம் 'கே - - * -- 1: என்ற குறிப்புக்கள் வலியுறுத்தும். போர்த்தளவாடங்கள் திம்மதி ( Dimmati) எள்ற அலுவலரின் மேற்பார்வையில் இருந்தன." - 1818இல் சிப்பாய்கள் 201பேர் இருந்தனர்: “ பாத சார துருப்பு " அதாவது காலாட்படைகள் ஆங்காங்குக் காவலின்பொருட்டு நிறுத்தப்பட்டிருந்தன. 29-10-1842க்குரிய குறிப்பு:8 " சமுத்வான், பாக்வான், பிரதிக்வான், தர்ஸி, சைனிக் ஆக 19 ; ஆசாரம் வாசல் 36 ; கீழவாசல் 19 : அலிவாசல் 20 ; சிவங்கோட்டை 36 ; மகாராஜா சிம்மாசனம் 1, சைனிக் 3 ஆக 4 : வெடிமருந்து 2; காவலர்கள் துருப்புக்கள் சப்தீஸ் காஸ்நீஸ் உட்பட 1020 பேர்கள் ' என்பதனின்று காவலுக்காக இத்தனைப்பேர் வேண்டியிருந்தனர் என்பது போதருகிறது. - இந்தப் படைஞருக்கு அவ்வப்பொழுது போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததாதல் வேண்டும. இதனை, 28-3-1831 சாலுவநாயக்கன்பட்டணம் மத்தியஸ்தர் அய்யாக் கண்ணுப்பிள்ளை அவர்களுக்கு ராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறித்துக் கடிதம் ' என்ற குறிப்பும், 35. ச. ம. மோ. த. 1-8 35.அ. ச. ம. மோ. க. 1–7. 33. 4-28, 29 37. 5-487 33. ச. ம. மோ, த. 2.85 39. ச. ம. மோ, த 17-3.