பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

469. சோல்ஜர் சண்டையிடும் முறையைப் பயிற்சி செய்தற்குக் கோவிந்த ஜெட்டி, சுப்பா ஜெட்டி திருச்சிக்குச் சென்ற வகையில் ' என்ற குறிப்பும் வலியுறுத்தும். அளவைகட்கு முத்திரையிடல் கும்பினியின் நேர்முக ஆட்சியில் வந்ததும் நிறுத்தலளவை முகத்தலள வைக்கருவிகள் சோதிக்கப்பட்டு அவை அளவு சரியாகவுள்ளனவா என்று கண்டு முத்திரை போடும் பழக்கம் வரலாயிற்று. இந்தப் பழக்கம் கோட்டையிலும் கோட்டை வெளியிலும் ஏற்படுத்தப்பட்டது. 1810 : தாலுக்கா, கோட்டையிலும் கோட்டை வெளியிலும் கடைத் தெருவிலிருக்கும் படிகல் படி மரக்கால் தோண்டி மனு வகையறாக்களுக்கு முத்திரை போடுவதற்கு இரும்பு வரவழைத்துத் தயார் செய்கிறது." என்ற குறிப்பு: அளவைக் கருவிகட்கு முத்திரையிடுவதற்குரிய அச்சு இரும்புக் கருவி தயார் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டிருத்தலைக் குறிப்பிடுகிறது. தஞ்சாவூர் தவிர்த்து மற்றப் பகுதிகளில் கும்பினி அரசாங்கமே முத்திரை போட்டது எனவும், அதற்குச் சத்திரம் முதலியவற்றில் இருந்த சர்க்கார் அலுவலர்கள் தடை செய்தால் " மாஜிஸ்ட்ரேட்" இடம் வழக்குத் தொடுக்குமாறு தாசில்தார்கள் ஆணை பெற்றனர் எனவும், இவ்வானை தம் பெருமைக்குக் குறைவாக உள்ளதெனச் சத்திரம் அலுவலர்கள் கருதினர் எனவும் பின்வரும் குறிப்பினால்' அறியப்பெறும் : 1844 அதிராம்பட்டினம் தாலுகா தாசில்தார் படி மரக்கால் சோதித்துப் பார்த்துத் தாலுகாவிலேயே முத்திரைபோடவேண்டியது. அதற்கு இடைஞ்ச் . இச் சர்க்கார் உத்யோகஸ்தர்கள் செய்தால் மாஜிஸ்திரேட்டிடம் தாக்கல் செய்ய உத்தரவு வந்திருக்கிறது. அரண்மனை உத்யோகஸ்தர்கள் எழுதிக் கொண்டது. மேலேகண்ட உத்தரவினால் ............ தருமத்துக்குப் பல இடைஞ்சல்களும் சத்திரம் உத்யோகஸ்தர்களுக்குக் கெளரவம் இல்லாமலும் இருக்கிறது ” பாலங்கள் அமைத்தமை - பு = - ■ 18ஆம் நூற்றாண்டில் ஆறுகளைக் கடத்தற்குப் பெரும்பாலும் பாலங்கள் இல்லையென்றே கூறலாம். எனினும் ஓரிரண்டு இடங்களில் வெள்ளம் இல்லாத காலங்களில் வண்டிகள் செல்வதற்குரிய பாலங்கள் இருந்திருத்தல் கூடும். இதனை, 40 ச. ம. மோ, த. 8–5 41. ச. ம. மோ, த. 4-17