பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470. '1888, வடவாற்றில் பழைய பாலத்தின் சுவர்களைக் கட்டச்செலவு ' -என்ற குறிப்பு' விளக்கும். தஞ்சாவூரினின்று திருவையாற்றுக்குப் போகும் பாதையில் தஞ்சைக்கு அருகில் வெண்ணாற்றுக்குப் பாலமும்," இடைவழியில் குடமுருட்டி ஆற்றுக்குப் பாலமும்,' கண்டியூரில் பாலமும்," திருவையாற்றில் காவேரிக்குப் பாலமும்,' ஆக நான்கு பாலங்களும் கட்டுவதற்கு முழுச்செலவுகளும் இரண்டாம் சிவாஜி கொடுத்தார் என்று தெரிகிறது. மேலும் திருவையாற்றுக் காவேரிக் குரிய பாலம் இரண்டாம் சிவாஜி அவர்களாலேயே திறக்கப்பட்டதாதல்கூடும் என்று தெரிகிறது: நான்கு பாலங்களுக்கும் செலவு ரூ. 71 ஆயிரம் ஆயிற்று என்று அப்பாலத்தில் பொறித்துள்ள கல்வெட்டு அறிவிக்கிறது. திருவையாற்றுப் பாலத்துக் கல்வெட்டு:-" “The bridge was erected at the expence of His Highness Maharaja Sivajee Rajah of Tanjore A. D. 1846-47 Sir H. C. Mongomary Bart and G. F. Bishop Esq. officiating Residents. Captin E. Lawford, Civil Engineer. His Highness has thus by four bridges completed the communication between Tanjore and Tiruviar for the pupic good at an expense of 71,000 rupees.” | வெண்ணாற்றங்கரைப் பாலம் கி. பி. 1836இல் அமைக்கப்பெற்றதாதல் வேண்டும் என்பது அங்குள்ள பின்வரும் கல்வெட்டினால் அறியப்பெறும்." வீரசிம்மவரத்தினால் சோழ தேசத்தில் சிம்மாசனத்தில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கிற கூடித்திரிய பூபாலராகிய இஸ் ஹைனஸ் ஸ்ரீமன்த் ராஜபூரீசிவாஜி மகாராஜா சத்ரபதி சாயப் அவர்கள் இந்தப்பாலத்தை ஸ்வஸ்தி பூரீ சாலிவாகன 1758-துன்மதி வருஷத்தில் லெப்டினான்று கர்னல் மக்லோட் இரசிடென்றா யிருக்கையில் கட்டி வைத்தார்கள்." திருவையாற்றுக் காவேரி பாலம் கட்டி முடித்தகாலத்தில் பக்கத்தில் சுவர் போடவில்லை என்றும், பின்னர் 1849இல்தான் இரண்டாம் சிவாஜி அளித்த நன்கொடை ரூ. 5705 கொண்டு சுவர் அமைக்கப்பட்டதென்றும் 14-12-1848 தேதி கொண்ட ஓராவணம் கூறுகிறது." இங்ங்னம் பல பாலங்கள் மக்களின் பொது நன்மைக்காகக் கட்டப் பெற்றன. இத்தகைய செயல்கள் வெள்ளையர் ஆட்சி எளிதில் நடை பெறற்கும் வேரூன்றி நிலைபெறுதற்கும் வசதியளித்தன என்பது மிகை யாகாது. 42. 5.482 43. 6-151 44. ச. ம. மோ, க. 18-98 45. ச. ம. மோ, க. 2-15 46. 1-22; ச. ம. மோ. க. 2-18; 4-82 47. ச.ம. மோ.த. 22-22 48. புலவர் செ. இராசு அவர்கள் படியெடுத்துக் கொடுத்தார் 49. புலவர் செ. இராசு அவர்கள் படியெடுத்துக்கொடுத்தார் 50. 1-226